“LIGER” அமெரிக்க படப்பிடிப்பில் நேருக்குநேர் சந்திக்கும், வரலாற்று நாயகன் மைக் டைசன் மற்றும் விஜய் தேவரகொண்டா

உலகின் பல முனைகளிலும் உள்ள மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும், வரலாற்று நாயகன் மைக் டைசன், இந்திய திரையுலகில், பன்மொழி இந்திய திரைப்படமாக உருவாகும் LIGER ( saala Crossbreed ) படத்தில் அறிமுகமாகிறார். இன்றைய தலைமுறையின் கனவு நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில்,
கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிகு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இப்படத்தை இயக்குகிறார். வீழ்த்தமுடியாத வீரனாக, குத்துச்ண்டையில் அதிரடி பஞ்ச்களால் மக்களின் அபிமானத்தை குவித்த, வரலாற்றின் புகழ் மிகு நாயகன் மைக் டைசன் மிக முக்கியமான, நேர்த்தியான பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் பொன்நாள் வந்தே விட்டது. தற்போது “LIGER” படக்குழு அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இருவரும் பங்குபெறும் மிக முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளது. இன்று துவங்கியுள்ள இந்தப்படப்பிடிப்பில், மிக முக்கிய காட்சிகள் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டு வருகிறது. வெளியாகியுள்ள படப்பிடிப்பு தள போஸ்டரில், விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இருவரும் சிரித்து மகிழ்ந்தபடி இருக்கிறார்கள். ஆனால் படத்தில் அதிரடியான பாத்திரங்களை ஏற்றிருக்கும் இருவரும், இயக்குநர் ‘ஆக்சன்’ சொன்னவுடனே முற்றிலும் கதாப்பாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள்.

இந்த மனிதர் அன்பானவர் ❤️, இவருடன் இணைந்திருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் பொக்கிஷமாக பாதுகாப்பேன். அதிலும் இந்த தருணம், வாழ்நாள் பொக்கிஷமாக இருக்கும். #Liger Vs The Legend..
இரும்பு மனிதரை நேருக்கு நேர் சந்தித்தபோது @MikeTyson ,” என விஜய்தேவரகொண்டா தனது வலைதளபக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.

LIGER படத்தில் மேலும் பல வெளிநாட்டு குத்து சண்டை வீரர்களும் இணைந்து நடிக்கின்றனர். Puri connects நிறுவனத்துடன் பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்தியாவின் பன் மொழிப்படைப்பாக பிரமாண்டமாக உருவாகும் இப்படைப்பில், உலகப்புகழ் மைக் டைசன் இணைய, Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

LIGER திரைப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2022 ஆண்டின் முதல் காலாண்டில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

தொழில் நுட்ப குழு
இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha