அறம் இணையதளத்தில் லீக்

அறம் படம் தற்போது இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.  நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர் கலெக்டர் கதாப்பத்திரம் ஏற்று நடித்து தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அறம்’. இதில், ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் கலெக்டர் மதிவதனியாக நடித்துள்ளார் நயன்தாரா. இப்படத்தில் அவரின் இயல்பான நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.  இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதால்; படம் நல்ல வசூல்செய்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில்,  அறம் படம் இணைய தளங்களில் வெளியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது, படக்குழுவினரை அதிர்ச்சியில் உறைய செய்திருக்கிறது.  “புதிய படங்களை இணையதளத்தில் வெயிடுவோரை ‘பொறி’ வைத்துப் பிடித்தே தீருவேன்” என நடிகர் விஷால் என்னதான் சவால் விட்டாலும், ‘பிடுத்துப் பார்!’ என எதிர் சவால் போட்டு, தொடர்ந்து புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட்டு திரையுலகத்தினரை திக்கு முக்காட வைக்கின்றனர் தமிழ் ராக்கர்ஸ்.