ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், “பாகுபலி” பிரபாகரன், அமிர்த ஐயர், VTV கணேஷ், இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், பாத்மேன், அறந்தாங்கி நிஷா, “ஆதித்யா” கதிர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லீடர்.
நாயகன் லெஜெண்ட் சரவணன் தூத்துக்குடியில் கார் மெக்கானிக்காக இருக்கிறார். அங்கு தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். அம்மா இல்லாத தன் மகள் மீது அளவு கடந்த பாசத்தையும் மகளுக்காக எதையும் செய்பவராகவும் இருக்கிறார்.
தூத்துக்குடியில் இருக்கும் துறைமுகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் வில்லன் பாகுபலி பிரபாகரன்.
அவர் துறைமுகத்தில் செய்ய இருக்கின்ற ஒரு மிகப்பெரிய அபாயகரமான செயலை தடுக்க முயற்சி செய்கிறார் இன்ஸ்பெக்டரான ஆண்ட்ரியா.
ஆனால் அதனை ஆண்ட்ரியாவால் செய்ய முடியாமல் போகிறது இதனால் துறைமுகத்திற்கு அடிக்கடி கார் மெக்கானிக்காக சென்று வரும் லெஜன்ட் சரவணனை வைத்து அந்த வேலையை செய்து முடிக்க நினைக்கிறார்.
அதற்காக ஆண்ட்ரியா சரவணனின் மகளை வைத்து ஒரு திட்டம் போடுகிறார் அந்த திட்டத்தில் சரவணன் பிரபாகரனின் கடத்தல் பொருளை போலீசில் சிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் அவரது சாம்ராஜ்யத்தையே அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இந்த முயற்சியில் காவல்துறை உயர் அதிகாரியான ஷாம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனால் கோபமடையும் ஷாம், ஒரு கார் மெக்கானிக்கான லெஜெண்ட் சரவணன் எப்படி இப்படி ஒரு வேலையை செய்ய முடியும் என்று சந்தேகப்பட்டும், அவர் மீது கோபப்பட்டும் லெஜெண்ட் சரவணனை பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில், காவல்துறையை பயன்படுத்தி திட்டமிட்டு பாகுபலி பிரபாகரனை லெஜன்ட் சரவணன் அழித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்கிறார் ஷாம்.
அதன் பிறகு லெஜென் சரவணன் பற்றிய உண்மை விசாரணையில் அவர் யார் என்பது தெரிய வருகிறது. லெஜெண்ட் சரவணன் யார்? எதற்காக காவல்துறையை பயன்படுத்தி பாகுபலி பிரபாகரனை அழித்தார்? என்பதே லீடர் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : ஆர் எஸ் துரை செந்தில்குமார் இசை : ஜிப்ரான்
தயாரிப்பு : லெஜன்ட் சரவணா ஸ்டோர் ப்ரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு : வெங்கடேஷ் எஸ்
எடிட்டர் : பிரதீப் இ ராகவ்
கலை இயக்குனர் : ஜி.துரைராஜ்
சண்டைக்காட்சி : மகேஷ் மேத்யூ
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்


