நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா இவர் கிண்டியில் ரேஸ்கோர்ஸ் அருகே தி ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வந்தார். பல காலமாக அந்த பள்ளி வாடகை கட்டடத்தில் இயங்கி வந்துள்ளது. பள்ளி கூடம் இருக்கும் இடத்திற்கு வாடகை தராமல் லதா ரஜினிகாந்த் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார்.
இடத்தின் உரிமையாளர் பலமுறை லதா ரஜினிகாந்திடம் வாடகை கேட்டும் லதாரஜினிகாந்திடம் இருந்து சரியான பதில் வராததால் இடத்தின் உரிமையாளர் பள்ளியை இழுத்து பூட்டு போட்டு மூடியுள்ளார். கடந்த 5 ஆண்டுகாலமாக வாடகை தரவில்லை என்று இடத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். சுமார் 10 கோடி ரூபாய் வாடகை பாக்கி என்று சொல்லப்படுகிறது.