- ஸ்டெம் கல்வித் திட்டத்தை [STEM education], இந்தியாவில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 23 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
- எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையை மாணவர்கள் எதிர்கொள்ளும் விதமாக அவர்களை தயார்படுத்தும் நோக்கில் இந்த “ஸ்டெம் – STEM” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- “ஸ்டெம்” கல்வித் திட்டத்தில் தனித்திறன் பெற்று விளங்கும் அமெரிக்க இந்திய அறக்கட்டளை (ஏஐஎஃப்) [American India Foundation (AIF)] இந்த “பொறியியல் எதிர்காலங்கள்” திட்டத்தில் எல்&டி நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு செயல்பாடு பிரிவுடன் இணைந்து செயல்படுகிறது
சென்னை, அக்டோபர் 19, 2019:- லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனம் (L&T) இன்று தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு செயல்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக (சிஎஸ்ஆர்), சென்னையில் தமிழக அரசால் நடத்தப்படும் 20 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ’ஸ்டெம்’ கல்வியை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ’ஸ்டெம்’ (STEM – SCIENCE, TECHNOLOGY, ENGINEERING AND MATHEMATICS) என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என்பதன் ஆங்கில முதல் எழுத்துகளின் சுருக்கமாகும். இந்த கல்வியை வழங்க எல்&டி நிறுவனம் மிகப் பொருத்தமாக ’ENGINEERING FUTURES’ – ’இன்ஜினியரிங் ஃப்யூச்சர்ஸ்’ – என பெயரிட்டுள்ளது. ’பொறியியல் எதிர்காலம்’ என தமிழில் இது அழைக்கப்படுகிறது. இந்த கல்வித் திட்டமானது தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 83 அரசுப் பள்ளிகளுக்கு இந்த நிதி ஆண்டில் விரிவுபடுத்தப்படும்.
இந்த திட்டமானது ஸ்டெம் கல்வி முறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அமெரிக்க இந்திய அறக்கட்டளையுடன் இணைந்து தொடங்கப்படுகிறது. 6, 7, 8 – ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 23 ஆயிரம் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் மிக உதவிகரமாக அமையும். மிகச் சிறப்பாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் அந்த மாணவர்களுக்கு செயல் முறை அடிப்படையிலான கல்வி, தொழில் நுட்ப கல்வி போன்றவை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்றுவிக்கப்படும்.
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்&டி நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் மற்றும் மூத்த நிர்வாக துணைத் தலைவர் எம்.வி சதீஷ் [Mr. M V Satish, Whole Time Director & Senior Executive Vice President, L&T, இந்தத் திட்டத்துக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பள்ளி கட்டமைப்பை, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டாக்டர். கண்ணப்பனிடம் [Dr. Kannappan, Director – School Education, Govt. of Tamil Nadu] வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க இந்திய அறக்கட்டளையின் டிஇ திட்ட இயக்குநர் சன்யுக்த சதுர்வேதி [Ms. Sanyukta Chaturvedi, Director- DE Program American India Foundation] உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எல்&டி நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் மற்றும் துணை நிர்வாகத் தலைவர் எம்.வி சதீஷ் (Mr. M V Satish, Whole Time Director & Senior Executive Vice President L&T), “தற்போது வேலை வாய்ப்புகளுக்கு “ஸ்டெம் – STEM” அறிவுக்கான தேவை மிக வேகமாக அதிகரித்துவரும் சூழலில் நாம் இருக்கிறோம். மிகச் சிறந்த அறிவாற்றல் தரம் இந்தியாவில் உள்ளது. ஆனாலும் தேர்வை மையமாகக் கொண்ட கல்வித் திட்டம் இந்தியாவில் உள்ளதால் புதுமையான எண்ணங்கள், நவீன படைப்பாற்றல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிதல் போன்றவற்றில் குறைந்த அளவிலான மாணவர்களே கவனம் செலுத்துகின்றனர். அது போன்ற வசதிகளும் குறைவான மாணவர்களுக்கே கிடைக்கின்றன. இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய அவசியத் தேவை தற்போது உள்ளது. எல்&டி நிறுவனம், தொழில் நுட்பம், பொறியியல், புதுமைப் படைப்பாற்றல் ஆகிய அனைத்திலும் ஒரு சேரத் தகுதி பெற்றுள்ள எல்&டி நிறுவனம், இந்த இடைவெளியை நிரப்புவதற்கு “பொறியியல் எதிர்காலங்கள் – ENGINEERING FUTURE” திட்டத்தின் மூலம் தீர்வு காண விரும்புகிறது. அதை செயல்படுத்தும்விதமாக ஏஐஎஃப் மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து எல்&டி ஸ்டெம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.” என்றார்.
தேசிய அறிவியல் அமைப்பின் [National Science Foundation (2018)] கணிப்பின் படி, அடுத்த பத்தாண்டுகளில் 80 சதவீத வேலை வாய்ப்புகள் கணிதம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் திறன்களை அடிப்படையாகக் கொண்டே அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ’பொறியியல் எதிர்காலங்கள்’ என்ற திட்டத்தின் மூலமாக எல்&டி கட்டுமான நிறுவனம் புதுமைகளை முன்னெடுத்துச் சென்று சிறந்த ஸ்டெம் கல்வி மாதிரியை வழங்க திட்டமிட்டுள்ளது. இது கல்வித் துறையில் ஊக்க சக்தியாகத் திகழும்.
எல்&டி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமானது (சிஎஸ்ஆர் – corporate social responsibility) சமூகத் தேவைகளுக்காக புதுமைப் படைப்புகள் மற்றும் தொழில் நுட்பத்தை கையாளும் உத்தியை வலியுறுத்துகிறது. பொறியில் எதிர்காலம் திட்டம், அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் ஸ்டெம் கல்வி வாய்ப்பை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 21-ம் நூற்றாண்டு உலகை வெற்றிகரமாக எதிர்கொள்ள இது உதவும்.
நிறுவனத்தின் பின்னணி….:
லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனம் ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இது தொழில்நுட்பம், பொறியியல், கட்டுமானம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு 21 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டும் நிறுவனமாகத் திகழ்கிறது. உலகம் முழுவதிலும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்திய தனியார் துறை நிறுவனங்களில் மிகப் பெரிய மற்றும் பெரிதும் மதிக்கப்படும் நிறுவனங்களுள் ஒன்றாக எல்& டி திகழ்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்ட வலுவான நோக்கத்துடன் செயல்படுவதாலும், உயர்தரத்தை தொடர்ந்து பராமரித்து வருவதாலும் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு துறைகளில் தலைசிறந்த இடத்தை எல்&டி நிறுவனம் பிடித்து இருப்பதுடன் அந்த இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.


