கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று விடக்கூடாது என கருதிய லல்லு பிரசாத் யாதவ், தனது பரம எதிரியாக கருதப்பட்ட நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். அதேபோல், நடந்து முடிந்த உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக பல முயற்சிகள் எடுத்து வந்தார். ஆனால், தேர்தல் முடிவுகளில் லல்லு பிரசாத் யாதவ் ஆதரித்த சமாஜ்வாடி – காங்கிரஸ் கூட்டணி படு தோல்வியை தழுவியது, அதேபோல், யார் வரக்கூடாது என்று நினைத்தாரோ அதே பா.ஜ.க அசுர வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ள லல்லு உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடும் ஹோலி பண்டிகையை புறக்கணித்துள்ளார். எப்போதும் லல்லுவின் வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில் ஹோலி பண்டிகை களைகட்டும். ஆனால், இம்முறை லல்லு பெரிதாக ஆர்வம் காட்டாததால் அவரது கட்சித் தொண்டர்களும் பண்டிகையை சிறப்பாக கொண்டாடவில்லை. இருப்பினும், தனது டுவிட்டர் பக்கத்தில் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை லல்லு பதிவு செய்துள்ளார்.