லால் சிங் சத்தா சிறுவயதிலிருந்தே நடக்க முடியாதவர் மற்றும் புரிதல் இல்லாதவர். அவருடைய அம்மா தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்துகிறார். பின்னர் லால் ரூபாவை (கரீனா கபூர்) சந்திக்கிறார். சிறுவயதில் தாயை இழந்த ரூபா பின் லாலின் வீட்டில் தங்க வருகிறாள். இருவரும் ஒன்றாகப் படிக்க பள்ளிக்குச் செல்கிறார்கள். ரூபாவின் ஒவ்வொரு செயலும் லாலை மகிழ்விக்கிறது. ரூபாவும் அவரை ஊக்குவிக்கிறார், ஒரு சமயத்தில் லால் நடக்கக் கற்றுக்கொள்கிறார், அவர் ஓடவும் கற்றுக்கொள்கிறார், ஆனால் புரிதல் மட்டும் லால் சிங்கிற்கு குறைவாக இருக்கிறது. அதே நேரத்தில் ரூபாவுக்கு பணக்காரர் ஆக வேண்டும். எந்த வழியிலாவது மாடலாக மாறி, மும்பையில் ஹீரோயினாக வேண்டும் என்பது அவளின் கனவு.இவர்களின் கனவு வெவ்வேறு திசையில் பயணிக்கிறது. இருவரும் பிரிகிறார்கள். லால் சிங் தன் தாயின் உதவியோடு ராணுவத்தில் சேர்ந்து, பல விஷயங்களைச் செய்கிறார்.லால் சிங் தன் வேலையை நேசித்து சிறப்பாக பயிற்சி பெறுகிறார். ராணுவத்தில் சேர்ந்த பிறகு எப்படி ஜனாதிபதியிடம் பதக்கம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார்? ரூபாவுக்கும் லாலுக்கும் சந்திப்பு நடந்ததா? அதன் பின் நடந்தது என்ன? என்பதே படத்தோட மீதி கதை
நடிகை-நடிகர்கள்:
அமீர்கான், கரீனா கபூர் கான், நாக சைதன்யா, மோனாசிங், மானவ் விஜ், மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
இயக்கம் : அத்சவத் சந்தன்
கதாசிரியர் : அதுல் குல்கர்னி
ஒளிப்பதிவு : சத்யஜித் பாண்டே படத்தொகுப்பு : மேமந் சர்க்கார்
இசை : ப்ரீதம்
பின்னணி இசை : தனுஜ் டிக்கு
தமிழ் பாடலாசிரியர் : முத்தமிழ்
மக்கள் தொடர்பு : பி.வெங்கடேஷ்