குரங்கு பொம்மை – திரைவிமர்சனம்

பாரதிராஜா தஞ்சாவூரில் மிகவும் செல்வந்தராகவும், தாதாவாகவும் இருக்கும் தேனப்பனிடம் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, மகள், மகன் விதார்த் மற்றும் ஊர் மக்கள் பலரும் பாரதி ராஜா, தேனப்பனிடம் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவருடன் விசுவாசத்துடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஐந்து கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலை ஒன்று திருடப்பட்டு தேனப்பனின் கைக்கு வருகிறது.

இந்த சிலையை சென்னை இராயபுரத்தில் இருக்கும் குமரவேல் மூலம் விற்க முயற்சி செய்கிறார். அதன்படி அந்த சிலையை குரங்கு பொம்மை உள்ள பையில் போட்டு பாரதிராஜாவிடம் கொடுத்து சென்னைக்கு அனுப்புகிறார். பாரதிராஜாவும் சென்னையில் கால்டாக்ஸி டிரைவராக இருக்கும் விதார்த்துக்கு தெரியப்படுத்தாமலே வருகிறார். சென்னை வந்த பாரதிராஜாவிடம் அந்த குரங்கு பொம்மை பையை வாங்கிக் கொண்டு, தேனப்பனிடம் பாரதிராஜா வரவில்லை என்று கூறிவிடுகிறார்.

பாரதிராஜாவை தொடர்பு கொள்ள முடியாததால் சிலை என்ன ஆனது என்று பதட்டமாகிறார் தேனப்பன். இதற்கிடையில் சென்னைக்கு வந்த அப்பா காணவில்லை என்று அம்மா தகவல் கொடுக்க, விதார்த் பாரதிராஜாவை தேட ஆரம்பிக்கிறார். இறுதியில், பாரதிராஜாவை விதார்த் கண்டுபிடித்தாரா? தேனப்பனுக்கு சிலை கிடைத்ததா? குமரவேலின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்