பிரபு சாலமன் இயக்கத்தில், மதி, ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன்தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரடி, ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கும்கி 2.
நாயகன் மதி ஒரு மலை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே அம்மா அப்பாவின் ஆறுதல் இல்லாமல் தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார் .
அப்பொழுது வழி தவறி பள்ளத்தில் விழுந்துவிட்ட யானை குட்டி ஒன்றை காப்பாற்றுகிறார்.
அந்த யானையை காப்பாற்றியதிலிருந்து அந்த யானை மதியை சுற்றி சுற்றி வருகிறது. மதியும் யாரும் பாசம் காட்டாததால் யானையின் பாசத்தில் மதியும் அடிமையாகிறார்.
வருடங்கள் பல கடந்து விட அந்த யானை காணாமல் போய்விடுகிறது. மதி, யானையைத் தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் அந்த யானை நினைவிலேயே இருக்கும் மதியை பள்ளிக்கூட ஆசிரியர் நீ இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது நீ படித்து நன்றாக வரவேண்டும் என்று அறிவுரை கூற படித்து முடித்து ஐந்து வருடங்கள் கழித்து தன்னுடைய சொந்த ஊருக்கு வருகிறார்.
அப்போது அந்த தொலைந்து போன யானை வேறு ஒரு ஊரில் இருக்கிறது என்ற தகவல் வருகிறது அந்த யானையை தேடி செல்லும் மதி அந்த யானையை கண்டுபிடித்தாரா? இல்லையா? யானை தொலைந்து போனதற்கான காரணம் என்ன? என்பதே கும்கி 2 படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : பிரபு சலமான்
தயாரிப்பு : தவல் காடா
இசை : நிவாஸ் பக பிரசன் னா
ஒளிப்பதிவு : M.சுகுமார்
எடிட்டிங் : புவன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

