ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன், சான்வி மேக்னா, ஆர் சுந்தர்ராஜன், மலையாள நடிகை குடாசாநத் கணக்கம், நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஷான்விகா ஸ்ரீ, முத்தமிழ், பிரசன்னா பாலசந்திரன், அனிருத், பாலாஜி சக்திவேல், காயத்ரி, அபிலாஷ், ஸ்ரீநிவாசன், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் குடும்பஸ்தன்.
நாயகன் மணிகண்டன் மாத சம்பளம் வாங்கி குடும்பத்தை நடத்தி வரும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் மணிகண்டன்.
வேறு சமுதாயத்தைச் சேர்ந்த நாயகி சாந்தி மேக்னாவை காதலிக்கிறார் அவரை பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்.
மணிகண்டனின் அம்மாவாக குடாசாநத் கணக்கமும், அப்பாவாக ஆர் சுந்தர்ராஜனும் இருக்கிறார்கள்.
அக்காவின் கணவர் மாமாவாக குரு சோமசுந்தரம் இருக்கிறார். அவர் எப்பொழுதும் மணிகண்டனை ஃபெயிலியர் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
ஓரளவுக்கு நன்றாக போய்க் கொண்டிருக்கும் மணிகண்டனின் வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட நேரிடுகிறது.
வேலை போனதே வீட்டில் சொல்லாமல், வீட்டின் அடுத்தடுத்த தேவைகளுக்காக வீட்டிற்கு தெரியாமல் வட்டிக்கு கடன் மேல் கடன் வாங்குகிறார்.
ஒரு கட்டத்தில் மணிகண்டனுக்கு வேலையில்லாத விஷயம் மாமா குரு சோமசுந்தரத்திற்கு தெரிய வர, அவர் குடும்ப நிகழ்ச்சிக்காக அனைத்து குடும்ப உறவினர்களும் கலந்து இருக்கும் ஒரு நிகழ்ச்சியில், மணிகண்டனுக்கு வேலை இல்லாத விஷயத்தை தெரியப்படுத்த மணிகண்டன் அவமானப்படுகிறார்.
வீட்டிற்க்கு வேலையில்லாத விஷயம் தெரிந்ததும் மணிகண்டன் என்ன செய்தார் ? அதனை எப்படி சமாளித்தார்? அதன் பிறகு அவர் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பதே குடும்பஸ்தன் படத்தோட மீதீக்கதை.