குபேரா விமர்சனம்

ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ், அமிகோஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா, ஜிம், ஹரிஷ் பெராடி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் குபேரா

மத்திய அரசின் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை பெறுவதற்காக ரூ.1 லட்சம் கோடியை சட்ட விரோதமாக கைமாற்ற மிகப்பெரிய தொழில் அதிபரான (நீரஜ் மித்ரா) ஜிம் சர்ப் நினைக்கிறார்.

அதற்காக சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனாவை சந்திக்கிறார் ஜிம் சர்ப். அவர் தனக்கு உதவி செய்தால் சிறையில் இருந்து வெளியில் எடுப்பதாக சொல்கிறார் ஆனால் அதற்கு நாகார்ஜுனா ஒப்புக்கொள்ளவில்லை. 

சட்டப்படிதான் நான் இருப்பேன் என்று சொல்கிறார். ஆனால் நீதிமன்றமோ நாகார்ஜுனாவிற்கு மேலும் ஏழு வருட சிறை தண்டனை அளிக்கிறது. 

இதனால் விரக்தி அடைந்து தன் குடும்பத்திற்காக ஜிம் சர்ப்பிடம் தவறான செயலை செய்வதற்கு ஒத்துக் கொண்டு சிறையை விட்டு வெளியில் வருகிறார்.

சட்ட விரோதமாக பண பரிவர்த்தனையை செய்வதற்காக பிச்சைக்காரர்களாகிய நான்கு பேரை தேர்வு செய்கிறார் நாகார்ஜுனா அதில் ஒருவர் தான் தனுஷ்.

அவர்களுக்கு எப்படி பல் துலக்க வேண்டும், சாப்பிட வேண்டும், மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், கையெழுத்து போடுவது எப்படி என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அந்த பிச்சைக்காரர்கள் நான்கு பேர் பெயரில் தொழில் நிறுவனங்களை தொடங்கி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார். 

ஒவ்வொருவரும் பெயரிலும் பணப்பரிவர்த்தனை முடிந்த பிறகு அந்த நபர்களை கொலை செய்து விடுகிறார்கள். 

அப்படி தனுசையும் கொலை செய்வதற்காக அழைத்துச் செல்லும்போது அவர் தப்பித்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக பணம் பரிவர்த்தனை தோல்வி அடைகிறது. 

தனுஷை மீண்டும் தேட ஆரம்பிக்கிறார்கள். தனுஷ் உயிருடன் கிடைத்தால் மட்டுமே அந்த பணப்பரிவர்த்தனை முடியும் என்பதால் நாகார்ஜுனா தீவிரமாக தனுஷை தேடி வருகிறார்.

மும்பை ரயில் நிலையத்தில் ராஷ்மிகா மந்தனா அழுது கொண்டு இருக்கிறார், இவர்களிடமிருந்து தப்பித்து ரயில் நிலையம் செல்லும் தனுஷ்  மயங்கி விழ ராஷ்மிகா அவருக்கு தண்ணீர் தெளித்து உதவி செய்கிறார்.

ராஷ்மிகாவின் செல்போனில் இருந்து நாகார்ஜுனாவுக்கு தனுஷ் போன் செய்கிறார். இதனால் அவர்கள் ராஷ்மிகாவையும் துரத்த ஆரம்பிக்கிறார்கள். 

தனுஷும் ராஷ்மிகாவும் அவர்களிடம் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? பத்தாயிரம் கோடி பரிவர்த்தனை தனுஷால் நடந்ததா? இல்லை தனுஷ் இடமே இருந்ததா? ஜிம் சர்ப் போட்ட பிளான் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே குபேரா படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : சேகர் கம்முலா

ஒளிப்பதிவு : நிகேத் பொம்மி

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்

தயாரிப்பு : ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ், அமிகோஸ் கிரியேஷன்ஸ்

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)