கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில், டி. அருளானந்து தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா, லியோ சிவகுமார், பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கோழிப்பண்ணை செல்லதுரை.

ஐஸ்வர்யா தத்தா, ராணுவத்தில் பணிபுரியும் கணவனையும், இரண்டு குழந்தைகளான ஏகன், சத்யா, ஆகியோரை விட்டு விட்டு பாடகர் ஒருவருடன் போய்விடுகிறார்.

குழந்தைகள் இரண்டு பேரையும் பாட்டையும் குறிப்பில் விட்டுவிட்டு ராணுவத்திற்கு சென்று விடுகிறார் தந்தை. கொஞ்ச நாளில் பாட்டியும் இறந்து விட, கோழி பண்ணை வைத்து நடத்தும் மாமா யோகி பாபுவிடம் அடைக்கலம் அடைகிறார்கள்.

அப்பா அம்மாவின் செயரால் அவமானப்படும் ஏகன் மாமா யோகி பாபுவின் ஆதரவில் வளர்ந்து வந்தாலும் படிப்பில் விருப்பமில்லாததால் அவருடைய கோழி பண்ணையிலேயே வேலை செய்து பணத்தை சேர்க்கிறார்.

தங்கை சத்யாவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார். பானை கடை வைத்திருக்கும் பிரிகிடா, ஏகனை ஒரு தலையாக காதலித்து வருகிறார்.

கல்லூரியில் படிக்கும் சத்யாவை கல்லூரியின் லைப்ரரி ஆசிரியரின் மகன் காதலிக்கிறார் முதலில் வேண்டாம் என்று சொன்னாலும் பிறகு சத்யா காதலிக்க தொடங்குகிறார் இவர்களின் காதல் ஏகனுக்கு தெரிய வர, அம்மாவைப் போல் தங்கையும் வழிமாறி சென்று விடக்கூடாது என்று தங்கையின் காதலனை அடிக்கிறார்.

இதன் தன் தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தாரா? இல்லையா? சத்யா தன் காதலனை மறந்து வேறொருவரை திருமணம் செய்தாரா? இல்லைய விட்டுச் சென்ற பெற்றோரை மீண்டும் சந்தித்தார்களா? இல்லையா? என்பதை கோழிபண்ணை செல்லதுரை படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : என்.ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு : அசோக்ராஜ்
வசனங்கள் : பிரபாகர், சீனு ராமசாமி
எடிட்டர் : ஸ்ரீதர் பிரசாத்
கலை இயக்குனர் : ஆர்.சரவணா அபிராமன
தயாரிப்பு மேற்பார்வையாளர் : செல்வ சண்முகம்
நடன இயக்குனர் : நோபல்
சண்டைக்காட்சிகள் : ஸ்டன்னர் ஷ்யாம் பாடல் வரிகள் : ‘கவிப் பேரரசு’ வைரமுத்து கங்கை அமரன், பா.விஜய், ஏகாதேசி
ஆடை வடிவமைப்பு : வி.மூர்த்தி
ஒலி வடிவமைப்பு : டி. உதய குமார் (நாக் ஸ்டுடியோஸ்)
ஒப்பனை : ஏ.பிச்சுமணி
ஸ்டில்ஸ் : மஞ்சு அதித்யா
இணை தயாரிப்பாளர்கள் : கே. ஸ்ரீPவாசன் நிரஞ்சன் (பண்ணை பிரதர்ஸ்)
நிர்வாக தயாரிப்பாளர் : வீர சங்கர்
தயாரிப்பாளர்கள் : டாக்டர். டி. அருளானந்து, மாத்வோ அருளானந்து
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்