கொட்டுக்காளி விமர்சனம்

எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி, அன்னா பென் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கொட்டுக்காளி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்

சூரி முறைப்பெண்ணான அன்னா பென்னை திருமணம் செய்து கொள்ள நினைத்து அவருக்காக எல்லா தேவைகளையும் செலவுகளையும் ஆசையாக செய்கிறார்.

பிளஸ் டூ முடித்ததும் சூரி அன்னா பென்னை திருமணம் செய்து கொள்ளாமல், கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார்.

கல்லூரியில் படிக்கும் போது, அன்னா பென் வேறு ஜாதியை சேர்ந்தவரை காதலிக்கிறார்.

அதனால் சூரியை திருமணம் செய்ய மறுக்கிறார்.

அன்னா பென் ஒரு மாரியாக பித்து பிடித்தது போல் பேய் பிடித்தது போல் ஒரே பிரம்மை பிடித்தது போல் இருக்கிறார்.

அதனால் அன்னா பென்னிர்க்கு பேய் பிடித்து விட்டது என்று இரு குடும்பங்களும் சேர்ந்து சாமியாரிடம் அழைத்துச் சென்று பேய் விரட்ட நினைக்கின்றனர்.

உண்மையிலேயே அன்னா பென்னிற்க்கு பேய் தான் பிடித்திருந்ததா? சூரி அன்னா பென்னை திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? என்பதே கொட்டுக்காளி படத்தோட மீதக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இணைத் தயாரிப்பாளர் : கலை அரசு
எடிட்டர் : கணேஷ் சிவா
டோப் : சக்தி
ஒலி வடிவமைப்பாளர் : சுரேன் ஜி, எஸ். அழகிய கூத்தன்
விளம்பர வடிவமைப்பாளர் : கபிலன் நிர்வாக தயாரிப்பாளர் : பானு பிரியா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா டிஒன்