“கொஞ்சம் கொஞ்சம்” திரைவிமர்சனம்

கேரளாவில் காயலான் கடை [இரும்புக்கடை] வைத்துள்ள  அப்புக்குட்டியிடம் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாயகன் கோகுல் வேலை செய்கிறான். பக்கத்து தெருவில் அவன் காதலிக்க ஒரு மலையாள நாயகி சிக்குகிறது. நாயகன் கோகுலின் அம்மா இறந்து போகிறார். அக்காவுக்கு செல்போன் வெடித்து காது கேட்காமல் போக  கல்யாணம் தடைப்படுகிறது. அக்காவை கூட்டிக் கொண்டு கேரளா போறான். செய்யாத தப்புக்கு கேரள போலீஸிடம் மாட்டுகிறான். தன் காதலியைக் கைப்பிடிக்க வேண்டும், அக்காவுக்கு காது சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நேர்மையை விட்டுக் கொடுப்பதாகவும் இல்லை. இந்த நிலையில் அவன் என்ன முடிவு செய்வான், அக்கா திருமணம் முடிந்த்தா? இலனலையா? காதலியை கைப் பிடித்தானா? என்பதே மீதி கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்