கொம்பு சீவி விமர்சனம்

பொன்ராம் இயக்கத்தில், சண்முக பாண்டியன், சரத்குமார், தாரணிகா, ஸ்ருதி சுஜித் சங்கர், முனீஸ்காந்த், கல்கிராஜா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியம், பிரபாகர், இந்துமதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கொம்பு சீவி.

சுமார் 12 கிராமங்கள் வைகை அணை கட்டும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது. அதனால் அங்கு இருக்கும் கிராம மக்கள் வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள். 

அந்த இடத்தில் விவசாயம் செய்வதற்கான வசதிகள் ஏதும் இல்லாத காரணத்தால் அங்கு இருக்கும் அணையின் நீர் குறைந்து அங்கு நிலம் தெரியும் சமயத்தில் விவசாயம் செய்கிறார்கள். 

இப்படி மாறி மாறி நடப்பதால் அங்குள்ள மக்கள் வாழ்வதற்கு வழி இல்லாமல் தவிக்கிறார்கள். சிலர் தங்கள் வாழ்க்கைக்காக தவறான வேலைகளை செய்து வருகிறார்கள். அப்படி செய்பவர்களுக்கு சரத்குமார் துணையாக இருக்கிறார். 

சரத்குமாரும் சில சமயங்களில் கஞ்சா கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அப்படி இருந்தாலும் அந்த ஊர் மக்களுக்கு தலைவராகவே இருந்து வருகிறார். 

தன்னுடைய பெற்றோரை இழந்த சண்முக பாண்டியனை சிறு வயதிலிருந்து சரத்குமார் தன்னுடன் வைத்துக் கொள்கிறார். சண்முக பாண்டியனும் சரத்குமாரை போலவே தவறான வேலைகளை செய்து வருகிறார். 

இவர்கள் செய்யும் கஞ்சா தொழிலை அழிப்பதற்காக வருகிறார் போலீஸ் உயரதிகாரியாக இருக்கும் சுஜித் சங்கர். 

சுஜித் சங்கர் இவர்களின் கஞ்சா தொழிலை அழித்தாரா? இல்லையா? அதன் பிறகு இவர்களின் வாழ்க்கை என்னவானது? என்பதே கொம்பு சீவி படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : பொன்ராம் 

தயாரிப்பு : முகேஷ் டி செல்லையா 

இசை : யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு : பாலசுப்பிரமணியம் படத்தொகுப்பு : தினேஷ் பொன்ராஜ் 

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்