கோலமாவு கோகிலா விமர்சனம்

மாத சம்பளத்துக்கு வேலைக்கு சென்று வரும் நடுத்தர வர்க்க பெண்ணாக நயன்தாரா வருகிறார். அம்மா, அப்பா, தங்கை என சிறிய குடும்பமாக இருந்தாலும் பொருளாதார வசதியின்றி வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அம்மா சரண்யா பொன்வண்ணனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. அறுவை சிகிச்சை செய்ய 15 லட்சம் பணம் தேவைப்படுகிறது. பணத்திற்காக நிறைய இடங்களில் கண்ணீரோடு அலைகிறார் கிடைக்கவில்லை.

கடைசியில் பணத்திற்காக போதை மருந்து கடத்தும் கும்பலிடம் வேலைக்கு சேர்ந்து போதை மருந்து மாற்றி பணம் பெற முடிவு செய்கிறார். அதன்படி அத் தொழிலை செய்ய ஆரம்பிக்கிறார். இதில் பிரச்சனை ஏற்பட போதை மருந்து கடத்தும் தலைவன் மிரட்டுகிறான். போலிசும் ஒரு புரம் கண்காணித்து வருகிறது.

நயன்தாரா கடத்தல் தொழிலை சிறப்பாக முடித்தாரா? போலிசிடம் சிக்கினாரா? இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை எப்படி சமாளித்தார் என்பதே கோலமாவு கோகிலா படத்தின் மீதிகதை.

நயன்தாரா அப்பாவி பெண்ணாக பால்வடியும் முகத்துடன் புதுமையாக நடித்து அசத்தியுள்ளார். அவர் கண்களில் கண்ணீர் சிந்தும் காட்சியில் ரசிகர்களின் மனதும் கசியும். தங்கையாக வரும் ஜாக்குலின் வாயாடி பெண்ணாக ரசிக்க வைத்துள்ளார்.

யோகிபாபு தான் ஹைலைட் கூடவே அந்த மளிகை கடை சிறுவனும் செய்யும் காமெடியில் அரங்கம் அதிரும். சரண்யா பொண்வண்ணன் எப்போதும் போல அசத்தியுள்ளார். ஜாக்குலினை காதல் செய்பவராக வரும் இளைஞர் யார் இவர்? என கேட்க வைப்பது நிச்சயம்.

கோலமாவு கோகிலாவை ரசிக்கலாம்.