கிடா விமர்சனம்

ஸ்ரீஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், ரா.வெங்கட் இயக்கத்தில், பூராம், காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லெட்சுமி, பாண்டி, ஜோதி, ராஜூ, கருப்பு, ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கிடா”.

விவசாயியாக இருக்கும் பூ ராம் ஒரு ஏழை, தன்னோட அரவணைப்பில் வளரும் தன் பேரனுக்கு தீபாவளிக்கு புது டிரஸ் வாங்கி கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். பல இடங்களில் பலவாறாக முயற்சித்தும் அவருக்கு பணம் கிடைக்காமல் போக, தன்னோட பேரன் அன்பாக வளர்க்கும் ஆட்டை விற்க முடிவு செய்கிறார். ஆனால், அந்த ஆடோ சாமிக்கு நேர்ந்து விட்டது என்பதால், வியாபாரிகள் வாங்க பயப்படுகிறார்கள். ஆனால், பணத்திற்க்கு வேறு வழி இல்லாமல், அந்த ஆட்டை எப்படியாவது விற்று விட வேண்டும் என்று பூ ராம் முயற்சி செய்கிறார்.

இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் கறிக்கடையில் வேலை பார்க்கும் காளி வெங்கட்டோ, தனது முதலாளி மகனுடன் ஏற்படுகிற சண்டையால் அங்கிருந்து வெளியேறி, தீபாவளியன்று சொந்தமாக கறிக்கடை திறக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால், பணம் இல்லாத காரணத்தால் அவரால் ஆடு வாங்க முடியவில்லை. இருந்தாலும், ஒரு ஆட்டையாவது வாங்கி தீபாவளிக்கு கறிக்கடை போட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

இந்தநிலையில், பூ ராம் ஆடு விற்க முயற்சிக்கும் செய்தியை அறியும் காளி வெங்கட், சாமிக்கு நேர்ந்து விட்டது என்றாலும் பரவாயில்லை என்று அந்த ஆட்டை வாங்க முடிவு செய்கிறார். பூ ராம் தனக்கு பணம் கிடைக்கும், பேரனுக்கு புத்தாடை வாங்கிவிடலாம் என்று சந்தோசப்படும் நேரத்தில், அந்த ஆடு திருடுபோய் விடுகிறது.

விடிந்தால் தீபாவளி என்ற நிலையில், திருடிய ஆட்டை பூ ராம் மற்றும் காளி வெங்கட் தேடி செல்கின்றனர். அவர்களுக்கு ஆடு கிடைத்ததா?, இல்லையா?, இவர்களுடைய ஆசை நிறைவேறியதா?, இல்லையா? என்பதே ‘கிடா’-வின் மீதிக்கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள் :

ஒளிப்பதிவு : எம்.ஜெயப்பிரகாஷ்
இசை : தீசன்
எடிட்டர் : ஆனந்த் ஜெரால்டின்
பாடல்கள் : ஏகாதசி
கலை : கே.பி.நந்து
சண்டை : ஒம் பிரகாஷ்
மக்கள் தொடர்பு : ஏய்ம் சதீஷ்