கமலிடம் பாராட்டு பெற்ற கீர்த்தி சுரேஷ்
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு வெளி வந்துள்ள படம் ‘நடிகையர் திலகம்’. சாவித்ரி கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, இயக்குநர் நாக் அஸ்வின் இயக்குகியிருக்கிறார். மகாநதி என்ற பெயரில் தெலுங்கிலும் இந்தப் படம் வெளி வந்துள்ளது. இதில் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
மே 11ஆம் தேதி நடிகையர் திலகம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியிருந்தது. படத்தைப் பார்த்த பலரும் இதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பிரமிக்க வைக்கிறதாக பாராட்டியிருந்தார்கள். நடை, உடை, பாவனை என சாவித்ரியாகவே கீர்த்தி சுரேஷ் வாழ்ந்திருக்கிறார் எனவும் கூறினார்கள்.
அந்த வகையில் படத்தைப் பார்த்த கமல், கீர்த்தி சுரேஷை நேரில் அழைத்துப் ராட்டியிருக்கிறார். உலக நாயகனிடம் பாராட்டு வாங்கியதால், தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம் கீர்த்தி.