கீனோ விமர்சனம்

கந்தர்வ செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில், கிருத்திகா காந்தி தயாரிப்பில், திவாகர் இயக்கத்தில், மகாதாரா பகவத், ரேணு சதீஷு, கந்தர்வா, மாஸ்டர் சிவ சுகந்த், ஆர் கே திவாகர், ராஜேஷ் கோபிசெட்டி, சுந்தர் அண்ணாமலை, கண்ணதாசன், சிவம் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் கீனோ. 

கணவன் மனைவியாக இருக்கும் மகாதாரா பகவத் மற்றும் ரேணு சதீஷுக்கு மகனாக வருகிறார் கந்தர்வா. அப்பா மகாதாரா பகவத்  ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

கந்தர்வா மாடியில் துணி எடுக்க செல்லும்போது ஒரு உருவம் அவனை பயமுறுத்துகிறது. அதனை அவன் அம்மா ரேணு சதீஷிடம் சொல்ல அது ஒன்றும் இல்லை என்று சொல்லி விடுகிறார்.

சிறிது நாட்களில் அம்மா ரேணு சதீஷ் வேலை விஷயமாக வெளிநாடு சென்று விடுகிறார்.

வெற்றிடமாக இருக்கும் இடத்தில் எல்லாம் அந்த உருவம் வந்து நான் கீனோ என்னிடம் வா, என்னை கட்டிப்பிடி என்று கூறுகிறது. 

தனியாக இருக்கும் பொழுதும், காலி இடத்தை பார்க்கும் போதும், கந்தர்வாவுக்கு கீனோ  உருவம் தெரிந்து அவனை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.

ஒரு நாள் கணவனிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போது மகன் கந்தர்வ பயப்படுவதை பார்த்து பதறுகிறார் ரேணு சதீஷ். 

கெட்ட சக்தி எதும் வீட்டில் இருப்பதாகவும் சாமியாரை கூப்பிட்டு அதனை என்னவென்று பார்த்து சரி செய்ய சொல்கிறார் வேணு சதீஷ்.

ஆனால் வந்து பார்க்கும் சாமியார்களோ அப்படி எந்த ஒரு சக்தியும் வீட்டிலும் இல்லை கந்தர்வாவிடமும் இல்லை என்று சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இருப்பினும் அந்த உருவம் கந்தர்வாவை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த உருவம் யார்? எதற்காக பயமுறுத்துகிறது? என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே கீனோ படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : கந்தர்வ செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ்

தயாரிப்பாளர் : கிருத்திகா காந்தி

கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், இசையமைப்பாளர், இயக்குனர் : திவாகர்

ஒளிப்பதிவு : ஆலிவர் டேனி

படத்தொகுப்பாளர் : கிருத்திகா காந்தி

மக்கள் தொடர்பு : பெருதுளசி பழனிவேல்