சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்த 5 ஆவது அறிக்கையை காவேரி மருத்துவனை இன்று வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். 29ஆம் தேதியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பின்னர் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.
அவரது உடல்நிலை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் முக்கிய உறுப்புகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. அவரது கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டம் சீராக்கப்பட வேண்டியதுள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.