நைனா என்ற டானிடம் வைபவ்வின் நண்பன், இவர்களை சிக்க வைத்துவிட்டு, தான் மட்டும் தங்கப் புதையலைத் தேடி கிராமத்திற்கு செல்கிறான். வைபவ், அவரது மனைவி சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, ஆத்மிகா ஆகியோர் சிக்க வைத்த நண்பனையும், தங்கப் புதையலையும் தேடி கண்டுபிடிப்பதற்காக செல்கிறார்கள். வழியில், காட்டுக்குள் கிராமத்தைச் சென்றடைந்து அங்குள்ள ஒரு வீட்டில் தங்கள் நண்பனின் புகைப்படத்தைக் காட்டி விசாரிக்கிறார்கள். பின்பு தான் அவர்கள் எல்லாம் இறந்து பேய்களாக உலவிக்கொண்டிருப்பவர்கள் என்பதை கண்டறிந்து அதிர்ச்சியாகிறார்கள். இதனால் அந்த கிராமத்தை விட்டு செல்ல நினைக்கும் வைபவ் மற்றும் நண்பர்களால் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எந்த வழியாக சென்றாலும் மீண்டும் அந்த கிராமத்திற்கே திரும்பி வருவதும் மாற்று வழியில்லாமல் மாட்டிக் கொண்டதை அறிந்து பயப்படுகிறார்கள். இதுமட்டுமில்லாமல் வரலட்சுமி (மாதம்மா) பேயிடம் மாட்டிக் கொண்டு தப்பிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இறுதியில் புதையலையும், நண்பனையும், கண்டுபிடித்தார்களா? அந்த கிராமத்திலிருந்து தப்பித்தார்களா? என்பதே படத்தோட மீதிக்கதை.
நடிகை-நடிகர்கள்:
வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி, ஜான் விஜய் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : ஞானவேல் ராஜா, அபி, அபினாஷ் இளங்கோவன்
இயக்கம் : டிகே
இசை : எஸ்.என்.பிரசாத்
ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு
எடிட்டங் : பிரவீன் கே.எல்
கலை : செந்தில் ராகவன்
சண்டை : டான் அசோக்
மக்கள் தொடர்பு : யுவராஜ்