காத்து வாக்குல ஒரு காதல் விமர்சனம்

சென்னை புரொடக்ஷன் எழில் இனியன் தயாரிப்பில், மாஸ் ரவி இயக்கத்தில், மாஸ் ரவி, லக்ஷ்மி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், பாஸ்கர், தங்கதுரை, பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் காத்து வாக்குல ஒரு காதல்.

பார் நடத்தி வரும் சத்யா, ஹார்பரில் காண்ட்ராக்ட் எடுக்க நினைக்கிறார் தனக்கு தொழில் போட்டியாக வந்த சத்யாவை, ராயன் கொலை செய்கிறார்.

அடுத்து ராயனை கொலை செய்ய கர்ணன் காத்துக் கொண்டிருக்கிறார்.

பணத்திற்க்காக எதையும் செய்யும் ரத்னம், ராயனைப் கொலை செய்கிறார்.

ரத்னம் கொலை செய்தது ராயனை என்று தெரிந்தவுடன் போலீஸ் ரத்தினத்தை கைது செய்கிறது. இதற்கிடையில் காதலர்களாக இருக்கும் சந்தியாவை ஒருவன் கொலைகாரன் கொலை செய்ய காதலன் கிஷோர் பழிவாங்க நினைக்கிறார்.

ஜீவாவும், மேகலாவும், காதலிக்கும் காட்சிகள் மனதுக்கு இதமாகிறது.

காதலர் தினத்தன்று தன் காதலை சொல்ல வந்த மேகாவுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது, அது என்ன? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? இரத்தினத்தை மாஸ் ரவி  கொலை செய்தாரா? இல்லையா? என்பதே “காத்து வாக்குல ஒரு காதல்” படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : ஜிகேவி & மிக்கின் அருள்தேவ்

ஒளிப்பதிவு : ராஜதுரை & சுபாஷ் மணியன் 

எடிட்டர் : கம்பம் மூர்த்தி & ராஜ்குமார்

ஸ்டண்ட் : சூப்பர் சுப்பராயன்

தயாரிப்பு : எழில் இனியன் 

இணை தயாரிப்பு : ராஜாத்தி எழில் இனியன் 

மக்கள் தொடர்பு : குமரேசன்