கருப்பு பல்சர் விமர்சனம்

முரளி கிரஷ் எஸ் இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி, பிரின்ஸ் அஜய், பிராங்க் ஸ்டார் ராகுல், மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கருப்பு பல்சர்.

சென்னையில் ஒரு வாட்டர் பியூரிஃபையர் கம்பெனி ஒன்று நடத்தி வருகிறார் நாயகன் அட்டகத்தி தினேஷ். 

அட்டகத்தி தினேஷ் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பெண் தேடிக் கொண்டிருந்தார். அதில் ரேஷ்மா வெங்கடேஷ் மேட்ரிமோனி மூலம் தினேஷுக்கு அறிமுகம் ஆகிறார். 

ரேஷ்மாவை சந்திக்க செல்லும் அட்டக்கத்தி தினேஷ் என்னிடம் கருப்பு பல்சர் வண்டி இருப்பதாக பொய் சொல்லி விடுகிறார். ரேஷ்மாவோ அடுத்த முறை என்னை பார்க்க வரும் பொழுது கண்டிப்பாக கருப்பு பல்சருடன் தான் வர வேண்டும் என்று கூறிவிடுகிறார். 

இதனால் அட்டகத்தி தினேஷ் ஒரு பழைய கருப்பு பல்சர் வண்டியை மன்சூர் அலிகானிடமிருந்து வாங்குகிறார். அந்த கருப்பு பல்சரில் செல்லும் தினேஷுக்கும் ரேஷ்மாவுக்கும் விபத்து ஏற்படுகிறது. 

அதன் பிறகு அந்த கருப்பு பல்சரில் செல்லும் அனைவருக்கும் ஏதோ ஒரு விபத்து அதன் மூலம் ஏற்படுகிறது.

அந்த கருப்பு பல்சரில் அப்படி என்ன இருக்கிறது? அந்த கருப்பு பல்சர் மூலம் ஏன் விபத்து ஏற்படுகிறது? அட்டகத்தி தினேஷும் ரேஷ்மாவும் திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா? என்பதே கருப்பு பல்சர் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

எழுத்து & இயக்கம் : முரளி கிருஷ்ணா

ஒளிப்பதிவு : பாஸ்கர் ஆறுமுகம் 

இசை : இன்பராஜ் ராஜேந்திரன்

படத்தொகுப்பு : சசி தாட்சா 

தயாரிப்பு : டாக்டர் சத்யா முரளி கிருஷ்ணன்

மக்கள் தொடர்பு : மணிமதன் & தியாகு