காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதிக்கு இரு தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. காவேரி மருத்துவமனையில் வெள்ளிகிழமை நள்ளிரவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்பு, மீண்டும் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டது. இது தொண்டர்களை நிம்மதியடைய செய்தது.
ஆனால் நேற்று இரவு கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட பின் சீரானதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் உடல்நிலையில் நல்ல மாற்றம் தெரிந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.