கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் லார்க் ஸ்டுடியோ சார்பில், கே குமார் தயாரிப்பில், துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, ஷிவதா, பிரகிடா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர் வி உதயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கருடன்”.
சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். அப்பா அம்மா இல்லாமல் தனியாக இருந்த தன்னை அழைத்து வந்து நண்பனாக பாசத்துடன் இருந்த உன்னி முகுந்தனுக்கு நண்பனாக மட்டுமல்லாமல் நல்ல விசுவாசியாகவும் இருக்கிறார் சூரி.
சிறு வயதிலிருந்தே இவர்களை வளர்த்து வருபவர் வடிவுக்கரசி. அந்த ஊரில் இருக்கும் கோம்பை அம்மன் கோவில் நிர்வாக தலைவராகவும் இருக்கிறார். அந்த கோவிலின் நிர்வாகத்தில் சசிகுமாரும், உன்னிமுகுந்தனும் இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில், கோவிலின் பல கோடி சொத்துமதிப்புள்ள ஒன்று சென்னையில் இருக்க அந்த நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறார் அமைச்சராக வரும் ஆர். வி. உதயகுமார். அதற்காக அங்கு இருக்கும் பட்டயம் ஒன்றை கைப்பற்ற நினைக்கிறார்.
அதற்க்காக, அந்த கோவிலின் நிர்வாகத்திற்குள் தன்னுடைய ஆளான மைம் கோபியை உள்ளே அனுப்ப நினைத்து அதற்கு உதவி செய்யுமாறு காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனி ஆனையிடுகிறார் அமைச்சர் ஆர். வி. உதயகுமார்.
அதுமட்டுமின்றி நண்பர்களாக இருக்கும் மூவரையும் பிரிக்கவும் முயற்சி செய்கிறார். அதன்பிறகு நடந்தது என்ன?
மூவரின் நட்பும் பிரிந்ததா? இல்லையா? என்பதே கருடன் படத்தின் மீதிக்கதை.
தொழில் நுட்ப கலைஞர்கள்
எழுத்தாளர் : ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் & டீம்
ஒளிப்பதிவு : ஆர்த்தர் வில்சன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
படத்தொகுப்பு : பிரதீப் ஆ. ராகவ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்