காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், ரிஷெப் ஷெட்டி, ஜெயராம், ருக்மணி வசந்த், குல்ஷன் தேவ்ய்யா, சம்பத்ராம் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் காந்தாரா சாப்டர் 1.

ஒரு அடர்ந்த வனப்பகுதி தான் காந்தாரா. அந்த காட்டுப்பகுதியில் மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த மக்களில் ஒருவராக தான் இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. அங்கு இருப்பவர்கள் வீரத்தில் மிகச் சிறந்து விளங்குகிறார்கள். 

காந்தாரா காட்டுப்பகுதி அருகே பங்காரா என்ற ஒரு நகரம் இருக்கிறது அங்கிருக்கும் மக்களை மன்னராக இருக்கும் ஜெயராமன் ஆண்டு வருகிறார். ஜெயராமின் மகனாக குல்ஷன் தேவய்யா & மகளாக ருக்மணியும் இருக்கிறார்கள்.

மகன் குல்ஷனை அரசனாக மகுடம் சூட்டுகிறார் ஜெயராமன். எப்போதும் மது அருந்திக் கொண்டும் பெண்களுடன் உல்லாசமாகவும் இருந்து கொண்டும்,  நிர்வாகத்தை சரியாக நடத்தாமல் மோசமாக நடத்தி வருகிறார். 

காந்தாராவை கைப்பற்ற நினைக்கிறார் குல்ஷன். காந்தாராவுக்கு சென்றால் மரணம் தான் வரும் என்று ஜெயராமன் எச்சரிக்கிறார். ஜெயராமின் எச்சரிக்கையை மீறி அங்கு சென்று பலரை பலி கொடுத்து விட்டு திரும்புகிறார்.

காந்தாராவில் உள்ள மக்களும் ரிஷப் ஷெட்டியும் பாங்காரா நகரத்திற்குள் நுழைந்து வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இந்த விஷயம் மன்னர் குல்ஷனுக்கு தெரிய வர காந்தாராவை அடியோடு அழிக்க நினனத்து பெரும் படையோடு அங்கு போகிறார். 

அதன் பிறகு அங்கு நடந்தது என்ன? காந்தாராவை குல்ஷனால் அழிக்க முடிந்ததா? இல்லையா? ரிஷப் ஷெட்டி குல்ஷனை என்ன செய்தார்? என்பதே காந்தாரா கேப்டன் 1 படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : ஹோம்பாலே ஃபிலிம்ஸ் விஜய் கிரகன்தர் 

இசை :அஜ்னீஸ் லோக்நாத் 

ஒளிப்பதிவு : அரவிந்த் எஸ் காஷ்யப் 

மக்கள் தொடர்பு : யுவராஜ்