கண்ணப்பா விமர்சனம்

டிவென்டி ஃபோர் ஃபிரேம்ஸ் ஃபேக்டரி & ஏவிஏ என்டர்டெயின்மெண்ட் சார்பில், டாக்டர் எம். மோகன் பாபு தயாரிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால், அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், சப்தகிரி, முகேஷ் ரிஷி, மதுபாலா, ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரம்மாஜி, தேவராஜ், ரகு பாபு, சிவா பாலாஜி, சம்பத் ராம், லாவி பஜ்னி, ப்ரேஹுர் வகானி, ப்ரீகஹுர் வகானி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கண்ணப்பா.

கதைக்களம் இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது இப்பொழுது காளகஸ்தி என்று அழைக்கப்படும் உடுப்பூர் காட்டு பகுதியில் மலைப்பிரதேசத்தில் இருக்கிறார் நாயகன் திண்ணன் (விஷ்ணு மஞ்சு). அவருக்கு அப்பாவாக சரத்குமார் இருக்கிறார். 

தன்னுடைய சிறுவயதில் தன் நண்பன் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில் கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் இனிமேல் இந்த ஊரில் ஒரு உயிர் கூட போக விடமாட்டேன் என்று சொல்கிறார். கடவுளே இல்லை இது வெறும் கல் என்று கூறிக் கொண்டு வருகிறார். 

வேட்டையாடுவதில் மட்டுமல்லாமல், பலவித திறமைகளை தன்னுள் வைத்துள்ளார் விஷ்ணு மஞ்சு.

பக்கத்து பட்டிகளோடு சண்டை, பக்கத்து பட்டியில் வாழும் நாயகி ப்ரித்தியுடனான காதல் என்று போய்க் கொண்டிருக்கும் விஷ்ணு மஞ்சுவின் வாழ்க்கை எந்த இடத்தில் மாறுகிறது. 

கடவுளே இல்லை கடவுள் சிலைகள் எல்லாமே வெறும் கற்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் திண்ணன் எப்படி ஒரு தீவிர சிவ பக்தராக மாறுகிறார் என்பதே கண்ணப்பா படத்தோட கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

கதை & திரைக்கதை : விஷ்ணு மஞ்சு

தயாரிப்பாளர் : டாக்டர் எம்.மோகன் பாபு

பேனர் : இருபத்தி நான்கு பிரேம்கள் தொழிற்சாலை & AVA பொழுதுபோக்கு

இயக்குனர் : முகேஷ் குமார் சிங்

ஒளிப்பதிவாளர் : ஷெல்டன் சாவ்

இசையமைப்பாளர் : ஸ்டீபன் தேவஸ்ஸி

ஆசிரியர் : ஆண்டனி கோன்சால்வேஸ்

தயாரிப்பு வடிவமைப்பாளர் : சின்னா

நிர்வாக தயாரிப்பாளர் : வினய் மகேஸ்வரி & ஆர். விஜய் குமார்

ஸ்டண்ட் மாஸ்டர் : கெச்சா காம்பக்டீ

நடனம் : பிரபுதேவா, பிருந்தா & கணேஷ்

மக்கள் தொடர்பு : ஹஸ்வத் சரவணன் & சாய் சதீஷ்

DI & ஒலி கலவை : அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்