ஸ்கைமூன் என்டர்டெய்ன்மென்ட், இ ஃபைவ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில், எம்.கணேஷ் மற்றும் ஜெ.தனுஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில், அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கண்ணகி.
மயில்சாமி மற்றும் மௌனிகாவின் மகள் அம்மு அபிராமி. அம்மு அபிராமிக்கு திருமணம் செய்து வைக்க எண்ணும் அம்மா மோனிகா வாரம் ஒரு மாப்பிள்ளையை அழைத்து பெண் பார்க்கும் படலம் நடத்துகிறார். அவரே மாப்பிள்ளை மீது ஏதோ குறை என்று சொல்லி வேண்டாம் என்கிறார். அம்மு அபிராமிற்கு அதன் பின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பது ஒரு கதை.
இரண்டாவதாக ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் ஷாலின் சோயா, எதற்கும் கவலைப்படாத தைரியமான பெண். திருமணமே செய்யாமல் லிவிங் டுகெதர் பாணியில் ஆதேஷுடன் ஒரே வீட்டில் தங்குகிறார். ஒரு கட்டத்தில் ஷாலினை திருமணம் செய்ய நினைக்கிறார் ஆதேஷ் . இதில் இருவருக்கும் அர்ச்சனை ஏற்படுகிறது. இவர்கள் இருவரும் திருமணம் செய்தார்களா? இல்லையா? என்பது ஒரு கதை.
மூன்றாவதாக, உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக போராடிக் கொண்டிருக்கும் யஷ்வந்த் கிஷோருடன், கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் கருக்கலைப்பு செய்வதற்காக காதலன் யஷ்வந்த கிஷோருடன் கேரளா வரை டாக்டரை தேடி போகிறார்கள். எதற்காக குழந்தையை கலைக்கிறார்கள் அவர்கள் நிலை என்ன என்பது ஒரு கதை
நான்காவதாக, திருமணமான வித்யா பிரதீப், குழந்தை இல்லை என்று காரணம் காட்டி தனது கணவர் விவாகரத்து கேட்பதாக வக்கீல் வெற்றியிடம் சொல்கிறார். விவாகரத்து தர மறுத்து கோர்ட்டுக்கு அலைகிறார். அவரின் நிலை என்னவானது என்பது ஒரு கதை இப்படி நான்கு பெண்களின் கதையை சொல்கிற படம் தான் ‘கண்ணகி’.
தொழில் நுட்ப கலைஞர்கள்
இசை : ஷான் ரஹ்மான்
ஒளிப்பதிவு : ராம்ஜி
எடிட்டர் : கே.சரத்குமார்
பாடல்கள் : கார்த்திக் நேதா
கலை : குமார் கங்கப்பன்
பின்னணி இசை : ஷான் ரஹ்மான் மற்றும் அர்விந்த் சுந்தர்
ஒப்பனை : சண்முகம்
நிர்வாக இயக்குனர் : எஸ்.வினோத்குமார் தயாரிப்பு நிர்வாகி : ஜி.கண்ணன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது