ஆதி நல்ல பாடகர், இசை பிரியரும் கூட, பயம் மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக காதலி வைஷ்ணவி பெறும் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறி விடுகிறார். அதேபோல போதிய கல்வியறிவு இல்லாததால், ஆங்கிலத்தில் நன்கு பேச முடியாமல் தவிக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர் பாண்டி, திருமணத்திற்காக பெண்ணை தேடிக் கொண்டிருக்கும் கதிர், தன் தாயை இழப்பது, சிறுவயதில் தனக்குப் பிடித்த பெண்ணை கதிர் புறக்கணிப்பது, பாண்டி படிப்பை புறக்கணிப்பது என அவர்கள் தங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, தவறவிட்ட வாய்ப்புகளுக்காக வருத்த படுகிறார்கள். இந்த நிலையில், டைம் மெஷினுடன் வரும் நாசர் மூன்று நண்பர்களையும் அவர்களது கடந்த காலத்துக்கு சென்று, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவி செய்கிறார்.
டைம் மெஷின் மூலம் 1998க்கு திரும்பிச் செல்கிறார்கள். அவர்கள் வந்தவுடன், அவர்கள் தங்கள் இளைய பதிப்புகளைச் சந்தித்து அவர்களின் தவறுகளைத் திருத்தத் தொடங்குகிறார்கள்.
ஷர்வானந்த் தன் சிறுவயதில் நடந்த அம்மாவின் மரணத்தை தடுக்க முயற்சிக்கிறார். அது நடந்ததா? இல்லையா? பழைய நிலைக்கு மாறினார்களா? இல்லையா? என்பதே கணம் படத்தோட மீதிக்கதை.
நடிகர்கள்:
ஷர்வானந்த், அமலா அக்கினேனி, ரிது வர்மா, நாசர், ரவி ராகவேந்திரா, சதீஷ், ரமேஷ் திலக், மாஸ்டர் ஜெய், மாஸ்டர், ஹிதேஷ், மாஸ்டர் நித்யா, யோகி ஜாப், மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு நிறுவனம் : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு
இயக்குனர் : ஸ்ரீ கார்த்திக்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : தங்க பிரபாகரன்.ஆர்
இசை : ஜேக்ஸ் பெஜாய்
ஒளிப்பதிவு : சுஜித் சாரங்
எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் : அரவேந்திரராஜ் பாஸ்கரன்
எடிட்டர் : ஸ்ரீஜித் சாரங்
கலை இயக்குனர் : என்.சதீஷ் குமார்
ஸ்டண்ட் : ஏ.எஸ்.சுதேஷ்
ஸ்டைலிஸ்ட் : பல்லவி சிங்
பாடல்கள் : மதன் கார்க்கி, உமா தேவி, கபர் வாசுகி
மக்கள் தொடர்பு : ஜான்சன்