கம்பி கட்டின கதை விமர்சனம்

ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில், நட்டி நடராஜன், சுப்ரமணியன், சிங்கம்புலி, ஜாவா சுந்தரேசன், முகேஷ் ரவி, கராத்தே கார்த்தி, ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, வழக்கு என் முத்துராமன், முத்துராமன், வெற்றிவேல் ராஜன், டி.எஸ்.ஆர், கோதண்டன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கம்பி கட்டின கதை. 

நட்டி நட்ராஜ் பொதுமக்களிடம் மோசடி செய்து பணம் பறித்து அதன் மூலம் சொகுசாக வாழ்ந்து வருகிறார். 

பல கோடி மதிப்புமிக்க வைரத்தை கடத்த வேண்டும் என்று காவல் அதிகாரிகள் இருவர்  நட்டியிடம் சொல்கிறார்கள். ஆனால் நட்டியோ முதலில் மறுத்துவிட்டு அதன் பின்பு அதனுடைய மதிப்பினை தெரிந்த பிறகு தான் கடத்தித் தருவதாக சொல்கிறார். 

அதேபோல் அந்த வைரத்தை எடுத்து விடுகிறார் நட்டி. ஆனால் அந்த வைரத்தை எடுத்து தர வேண்டும் என்று சொன்னவர்களிடம் அதனை கொடுக்காமல் ஒரு இடத்தில் புதைத்து வைத்து விடுகிறார். 

இதனால் அந்த காவல் அதிகாரிகள் நட்டியை கேஸ் போட்டு சிறையில் அடைத்து விடுகிறார்கள். 

ஆறு மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளிவந்த நட்டி அந்த வைரத்தை தேடி செல்கிறார். அந்த வைரம் புதைக்கப்பட்ட இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் கட்டியுள்ளார்.

அந்த வைரத்தை எடுப்பதற்காக அந்த கோவிலுக்குள் சாமியார் வேடம் போட்டு செல்கிறார் நட்டி, சிறிது நாட்களிலேயே அந்த கோவிலை அவருடைய ஆசிரமமாக மாற்றிக் கொண்டு அந்த வைரத்தை தேட ஆரம்பிக்கிறார் அந்த வைரம் நட்டிக்கு கிடைத்ததா? இல்லையா? என்பதே கம்பி கட்டின கதை படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : ராஜநாதன் பெரியசாமி 

இசை : சதீஷ் செல்வம்

எடிட்டிங் : எஸ்.என்.ஃபாசில்

நடனம் : ராதிகா 

மக்கள் தொடர்பு : ஷேக்