சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் நேற்று சென்னை திரும்பினார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர்,“பாலியல் துன்புறுத்தல் என்பது திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது பக்தர்களுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம். வெளியில் இருந்து வேடிக்கை பார்ப்பவர்கள் கருத்து கூறுவது முறையல்ல.
எனக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உரையாடலை யாரும் தடுக்க முடியாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு உண்டு’’ என்றார்.
‘தேவர்மகன்-2’ தேவர் சமுதயாத்திற்கானஅமையுமா?” என்ற கேள்விக்கு, “தேவர் மகன்-2 அனைத்து சாதியினருக்கும் எதிரான படமாக இருக்கும். தேவர்மகன் படத்தின் தொடர்சியாக வெளிவரவுள்ள இத்திரைப்படத்தின் பெயர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை” என்றார்.