ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், ஜி.டில்லி பாபு தயாரிப்பில், பி.வி. சங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘கள்வன்’.
யானைகள் அடிக்கடி வந்து போகும் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் நாயகன் ஜீ வி பிரகாஷ். அவருடன் அவருடைய நண்பரான தீனாவும் சேர்ந்து வசிக்கிறார்.
இருவரும் திருடுவது, குடிப்பது என்று ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில் திருட போன ஒரு இடத்தில் நாயகி இவானாவை பார்த்ததும் அவர் மீது காதல் வசப்படுகிறார்.
ஆனால் இவானாவோ ஜீவி பிரகாஷ் திருடன் என்பதால் அவரை காதலிக்க மறுக்கிறார். இருப்பினும் இவானாவை காதலித்தே ஆக வேண்டும் என்று தீர்மானத்தில் இவானவுக்காக முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தாத்தாவாக தத்தெடுத்து கொள்கிறார்.
காதலுக்காக தான் பாரதிராஜாவை தாத்தாவாக தத்தெடுத்தார் என்று தீனாவும் பார்வையாளர்களாக நாமும் நினைக்கும் போது, அதற்கான காரணம் தெரிந்ததும் அதிர்ச்சி அளிக்கிறது. பாரதிராஜாவை தத்தெடுக்க காரணம் என்ன? ஜீவி பிரகாஷை இவானா காதலித்தாரா? இருவரும் திருமணம் செய்து கொண்டனரா? இல்லையா? என்பதே கள்வன் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி
தயாரிப்பாளர் : ஜி.டில்லி பாபு
ஒளிப்பதிவு & இயக்கம் : பி.வி. சங்கர்
பாடல்கள் இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
பின்னணி இசை : ரேவா
எடிட்டிங் : சான் லோகேஷ்
கலை : என்.கே. ராகுல்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா டிஒன்