ராஜலெக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் சார்பில், ராஜேஷ்வரி சந்திரசேகரன் தயாரிப்பில், ’கிடுகு’ பட புகழ் இயக்குநர் வீரமுருகன் இயக்கத்தில், தீபா, அப்புக்குட்டி, காயத்ரி, சம்பத் ராம், சேரன் ராஜ், யாசர் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் ‘கலன்’.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி (தீபா), கணவனை இழந்தாலும் கஷ்ட்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையை (யாசர்) படிக்க வைத்து ஆளாக்குகிறார்.
அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டி துணையாக நிற்கிறார். யாசரின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது. அவர்களிடம் இருந்து நண்பனின் தங்கையை காப்பாற்றும் யாசர், அவர்களது போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க முடிவு செய்கிறார்.
யாசர் உயிருடன் இருந்தால் தங்களது கஞ்சா வியாபாரத்திற்கு சிக்கலாகிவிடும் என்பதால், அவரது நண்பன் மூலமாகவே அவரை கஞ்சா கூட்டம் கொலை செய்துவிடுகிறது.
அநியாயத்தை எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது மகன் யாசரின் மரணத்திற்கு பழி தீர்ப்பதோடு, கஞ்சா போதைப் பொருளால் இளைஞர்களை சீரழித்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கூட்டத்தை வேறோடு அழிக்க யாசரின் தாய் தீபாவும், அவரது தம்பி அப்புக்குட்டியும் களம் இறங்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை அதிரடியாகவும், சமூகத்திற்கு அவசியமானதாகவும் சொல்வதே ‘கலன்’ படத்தின் கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு கம்பெனி : ராஜலெக்ஷ்மி புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ராஜேஷ்வரி சந்திரசேகரன்
இயக்குநர் : வீரமுருகன்
இணை தயாரிப்பு : குமரி, விஷ்வா
மக்கள் தொடர்பு : கார்த்திக் ஜே