விஜய் தொலைக்காட்சியின் மிக பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி கலக்க போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிகழ்ச்சி தமிழ் திரை உலகிற்கு பல நகைச்சுவை நடிகர்களை தந்திருக்கின்றது. இம்முறையும் சிறந்த நகைச்சுவை கலைஞர்களை அங்கீகரிக்கவுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக களமிறங்குகின்றனர் ஈரோடு மகேஷ் மற்றும் பாலாஜி அவர்கள் இவர்கள் இதுவரை நடுவர்களாக பங்கேற்று நம்மை பல முறை சிரிக்க வைக்கவும் செய்தனர்.
இம்முறை தொகுப்பாளர்களாக மட்டும்மில்லாமல் போட்டியாளர்களுக்கு மென்டர்களாகவும் களமிறங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தமிழ் திரையுலகையே தன் காமெடியால் திரும்பிப்பார்க்க வைத்த நடிகை கோவை சரளா அவர்களும் 80’s காலத்து கனவு கன்னியாக இருந்த நாயகி ராதா அவர்களும் இணைகின்றனர்.
இனி வரும் வாரங்களில் உங்களை மகிழ்விக்க வருகின்றனர் நம் கலக்க போவது யாரு போட்டியாளர்கள்.
இனி சிரிப்பதற்கான சரியான நேரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9.30 மணிக்கு உங்கள் விஜய் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.