கனமழை காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழையால் மாங்டி பகுதியில் இரண்டு பாலம், சிம்கோலாவில் ஒரு பாலம் சேதமடைந்துள்ளதால் யாத்திரை நிறுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தின் அயிலாகாட் பகுதியில் உள்ள காளி ஆற்றில் அபாய கட்டத்தில் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது.