விஜய் கௌரிஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்.எஸ் முருகராசு இயக்கத்தில், விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் கடுக்கா.
எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக இருந்து கொண்டு, அம்மாவின் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடந்தி கொண்டிருக்கும் நாயகன் விஜய் கௌரிஷ் பெண்களை பின் தொடர்வதும் அவர்களை சைட் அடிப்பதுமாக இருந்து வருகிறார்.
அவரின் வீட்டிற்கு எதிராக குடியேறுகிறார் நாயகி ஸ்மேஹா அவரை கண்டதும் காதல் வயப்படுகிறார் விஜய் கௌரிஷ் அதுமட்டுமில்லாமல் அவரை பின்தொடர்ந்து காதலிக்க சொல்லி தொல்லை கொடுக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க மறுபுறத்தில் விஜய் கௌரிஷின் நண்பராக இருக்கும் ஆதர்ஷும் ஸ்மேஹாவை விரும்புவதாக சொல்ல, விஜய் கெளரிஷை காதலித்துக் கொண்டே ஆதர்ஷின் காதலையும் ஏற்றுக்கொள்கிறார் ஸ்மேஹா.
ஒரு கட்டத்தில் நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது தெரியவர, இதனை சரி செய்ய இரண்டு பேரும் ஸ்மேஹாவை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்கள்.
அப்பொழுதும் ஸ்மேஹா இருவரிடமும் வேறு வேறு பதிலளித்து காதலில் சுற்ற விடுகிறார்.
எதற்காக ஸ்மேஹா இருவரையும் காதலிப்பதாக சொல்கிறார்?
ஸ்மேஹா உண்மையாகவே யாரை காதலிக்கிறார்? ஸ்மேஹாவின் காதலை உண்மை என்று நம்பிய விஜய் கெளரிஷ் மற்றும் ஆதர்ஷின் நிலைமை என்ன? என்பதை கடுக்கா படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : எஸ்.எஸ்.முருகராசு
இசை : கெவின் டி’காஸ்ட்
தயாரிப்பு : விஜய் கௌரிஷ் புரொடக்ஷன்ஸ், நியந்த் மீடியா அண்ட் டெக்னாலஜி, மலர் மாரி மூவிஸ் – கவுரி சங்கர் ரவிச்சந்திரன், அனந்தி பொன்னுசாமி