கிஷோர் மற்றும் லதா ராவ் மூன்று குழந்தைகளுடன் வீட்டு சாமான்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு தெருத்தெருவாக புரோக்கருடன் தேடுகின்றனர். ஒவ்வொரு காரணங்களால் எங்கையும் வீடு கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். இவர்களால் 4000 துக்கு மேல் வாடகையும் குடுக்க முடியவில்லை.
ஒரு வழியாக இவர்களுக்கு வீடு கிடைத்து விடுகிறது. ஆனால் ஒரு பிரச்னை 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என ஹவுஸ் ஓனர் சொல்கிறார், புரோக்கரும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டும் தான் இருக்கிறார்கள் என பொய் சொல்லி வீடு பிடித்து கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்.
இந்த பொய்யை உண்மையாக்க கிஷோர் தன் கடைசி பையனை ஒரு பெட்டியில் வைத்து வைத்து கொண்டு வருவதும் போவதுமாக இருகிறார். காம்பவுன்டுக்குள் குடிவரும் கருணாகரனுக்கும் ஹவுஸ் ஓனர் மகளுக்கும் காதல் உண்டாகிறது.
இப்படியே நாட்கள் நகரும் வேளையில் இவர்கள் சொன்ன பொய்யால் பிரச்சனைகள் ஏற்படுகிறது, ஹவுஸ் ஓனருக்கும் உண்மை தெரிய வருகிறது. பிறகு என்ன நடந்தது, பிரச்சனையை சமாளித்தார்களா? வீட்டை கலி செய்தார்களா? சொந்த வீடு வாகினார்களா? என்பதே படத்தின் மீதிக் கதை.
வாடகை வீட்டில் இருக்கும் நடுத்தர மக்களின் நிலையை அருமையாக காட்டியுள்ளார் இயக்குனர். கிஷோர் மற்றும் லதா ராவ் இருவரும் மிடில் கிளாஸ் கணவன் மனைவியின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறார்கள். கடைசி பையனாக வரும் சிறுவன் மனதில் நிற்கிறான்.
கடிகார மனிதர்கள் மக்களுக்கு பிடிக்கும் எதார்த்தமான படம்.
இத்திரைப்படம் வெற்றிப்பெற