காதலிக்க நேரமில்லை விமர்சனம்

ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யாமேனன், வினய், யோகி பாபு, லால், டிஜே பானு, ஜான் கொக்கேன், வினோதினி வைத்தியநாதன், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் காதலிக்க நேரமில்லை.

நாயகன் ஜெயம் ரவியும், டிஜே பானுவும் காதலிக்கிறார்கள். டிஜே பானுவிற்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை. ஆனால், ஜெயம் ரவிக்கோ விருப்பமில்லை, எந்த கமிட்மென்டும் வேண்டாம் என்று நினைக்கிறார். ஆகையால், இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் நித்யாமேனனும் ஜான் கொக்கனும் காதலர்கள். வீட்டிற்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்கிறார்கள். இதில் நித்யா மேனனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை. ஜான் கொகேன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை நேரில் பார்க்கும் நித்யா மேனன், ஜான் கொக்கனை விட்டு பிரிந்து விடுகிறார்.

திருமணமாகாமல் ஆண்கள் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் நித்தியாமேனன் ஐ வி எஃப் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து அதனை செயல்படுத்துகிறார்.

இந்த சமயத்தில் நித்தியா மேனனும் ஜெயம் ரவியும் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்கும் இடையே ஒரு நட்பு ஏற்படுகிறது, மனதிற்குள் இருவரும் ஒருவரை நேசிக்க தொடங்குகிறார்கள். இவர்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டார்களா? இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே காதலிக்க நேரமில்லை படத்தோட மீதி கதை.

ஜெயம் ரவியின் நடிப்பு, அவரது முந்தைய படங்களை விட இத்திரைப்படத்தில் சிறப்பாக இருக்கிறது. அவரின் அழுத்தமான நடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

நித்யா மேனனின் உணர்வுபூர்வமான நடிப்பு, அவரது திறமையையும், கதாபாத்திரத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

வினய், யோகி பாபு ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசை, படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஏரியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாகவும் அழகாகவும் உள்ளன.

மொத்தத்தில் “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும்.

ரேட்டிங் 3/5