ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில், தமயந்தி இயக்கத்தில், கபாலி லிங்கேஷ், காயத்ரி சங்கர், அனுமோல், ஐசக் வர்கீஸ், ரமேஷ் திலக், ஸ்வகதாகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் காயல்.
நாயகி காயத்ரி சங்கர் படத்தின் ஆரம்பத்திலேயே கணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து விட்டதாக அவரின் பெற்றோரான ஐசக் வர்கீஸ் அனுமோல்க்கும் தகவல் வருகிறது.
தகவல் வந்ததும் துடித்து போய் அங்கு சென்று மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுகின்றனர்.
தனது மகள் இறப்பிற்கு மனைவி அனுமோல் தான் காரணம் என்று அவருடன் பேசாமல் இருக்கிறார் ஐசக்வர்கிஸ்.
ஏனென்று கதை ஃப்ளாஷ் பேக் செல்கிறது. அப்பா அம்மா இருவர் மீதும் மிகுந்த பாசத்தை வைத்திருக்கிறார் காயத்ரி.
காயத்ரியும் லிங்கேஷும் காதலிக்கிறார்கள். காயத்ரியின் அப்பா ஐசக் வர்கீஸ் காயத்ரி மீது இருக்கும் பாசத்தாலும் லிங்கேஷின் குணத்தாலும் அவர்களின் காதலுக்கு ஓகே சொல்கிறார்.
ஆனால் அம்மா அனுமோலோ ஜாதியை காரணம் காட்டி லிங்கேஷை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன்னுடைய அண்ணன் மகனுக்கு காயத்ரியை திருமணம் செய்து வைத்து விடுகிறார்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில்தான் காயத்ரியின் மரணச் செய்தி அவர்களுக்கு வருகிறது.
காயத்ரியின் மரணம் தற்கொலையா? கொலையா? அதற்கு காரணம் என்ன? காயத்ரியின் மறைவிற்குப் பிறகு பேசாமல் இருந்த அனுமோலும் ஐசக்கும் என்ன செய்தார்கள்? என்பதே காயல் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : தமயந்தி
ஒளிப்பதிவு : கார்த்திக் சுப்பிரமணியம்
இசை : ஜஸ்டின் கெனன்யா
படத்தொகுப்பு : பர்வீன் பாஸ்கர்
தயாரிப்பு : ஜேசு சுந்தரமாறன்
மக்கள் தொடர்பு : குணா

