எம் மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அபி நக்ஷத்ரா, ரிஷா ஜேகப்ஸ், பார்வதி, சிந்து, மிலிந்த் சோமன், முத்து குமார், சிங்கம்புலி, வடிவேல் முருகன், பாலாஜி சக்திவேல், இர்ஷாத் அலி, சுதேவ் நாயர், அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர். அமரேந்திரன், சாதனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள இணைய தொடர் முத்து என்கிற காட்டான்.
அதிகமாக ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பாறை பகுதியில் விஜய் சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலை இருக்கிறது. இந்த தகவல் அறிந்து அங்கு வரும் காவல்துறை அந்த தலையை கைப்பற்றி விட்டு உடலை தேட ஆரம்பிக்கிறார்கள். தலையுடன் ஒரு கடிதமும் பணமும் இருக்கிறது, அந்த கடிதத்தில் என் தலையை அடக்கம் செய்துவிட்டு இந்த பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று எழுதியுள்ளது அதனையும் காவல்துறையினர் கைப்பற்றுகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட தலை மட்டும் இருந்த நபர் யார் என்ற விசாரணையில் விஜய் சேதுபதியின் பெயர் முத்து என்கிற காட்டான் என்று தெரிய வருகிறது. அப்படி அந்த முத்துவை தேடி காவல்துறையினர் பயணிக்கிறார்கள் அதில் பலவிதமான மற்றும் ஆச்சரியமான தகவல்கள் போலீசாருக்கு தெரிய வருகிறது.
அந்த தகவல்கள் என்ன? முத்து என்கிற காட்டான் எதற்காக கொலை செய்யப்பட்டு தலை மட்டும் அங்கு வைத்தார்கள்? முத்துவிற்கு அப்படி என்ன பகை இருந்தது? என்பதே காட்டன் இணையத்தொடரோட கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குநர் – எம். மணிகண்டன்
இயக்குநர் / எடிட்டர் – பி. அஜித் குமார்
ஒளிப்பதிவு (DOP) – மது என்
ஒளிப்பதிவு (DOP) – என். சண்முகசுந்தரம்
இசை – ராஜேஷ் முருகேசன்
ஒலி – அஜயன் அடாட்
கலை இயக்குநர் – ஜாக்கி
கலை இயக்குநர் – சாபு மோகன்
தயாரிப்பு – விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
நிர்வாக தயாரிப்பாளர் – சந்துருசேகரன்
நிர்வாக தயாரிப்பாளர் – வி.ஆர். குமார்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
70MM டிஜிவெர்ஸ் ப்ரைவேட் லிமிடெட் – சங்கர் பரமசிவன்
சவுண்ட் மிக்சர் – ராதாகிருஷ்ணன்
விளம்பர வடிவமைப்பாளர் – கோபி பிரசன்னா
SFX – அருண் (ஒலி சவுண்ட்)
பாடல்வரிகள் – கபிலன் ஷக்கர்
உடை வடிவமைப்பாளர் – ஜே. கவிதா
சண்டை அமைப்பு – சில்வா மாஸ்டர்
ஸ்டைலிஸ்ட் – கவிதா
மேக்கப் – மொஹிதீன், ரோனெக்ஸ் சேவியர்
புரோஸ்தெடிக்ஸ் – பல்லவி ஷ்ராஃப், தினேஷ் சுப்பராயன்
ஸ்டில்ஸ் – அபிலாஷ் முல்லசேரி

