காந்தா விமர்சனம்

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டக்குபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், வையாபுரி, காயத்ரி சங்கர், பிரிஜேஷ் நாகேஷ், பக்ஸ், பரதன், நிழல்கள் ரவி, ஜாவா சுந்தரேசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் காந்தா.

மாடர்ன் சினிமா என்று படப்பிடிப்பு நிறுவனம் இருக்கிறது. அதனை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனை சரி செய்து மீண்டும் நடத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார் தயாரிப்பாளர் ரவிந்தர் விஜய். அதற்காக பாதியில் நின்று போன சாந்தா என்ற படத்தை எடுக்க முடிவு செய்கிறார். 

இயக்குனரான சமுத்திரகனியை அழைத்து பேசி படத்தை எடுக்க முடிவு செய்கிறார். கிளைமாக்ஸில் ஹீரோ இறந்து விடுவது போலிருக்கிறது. 

ஆனால் சாந்தா படத்தின் நாயகன் ஆன துல்கர் சல்மான் ஹீரோ இறக்காமல் வேறு மாதிரியாக முடிக்க வேண்டும் என்று கூறுவதாக ரவீந்திர விஜய் சொல்கிறார்.

கதை என்னுடையது அதன் கிளைமாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் சமுத்திரக்கனி. 

துல்கர் சல்மான் கிராமத்தில் கூத்து கட்டி ஆடிக் கொண்டிருந்தவர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து நடிப்பு கற்றுக் கொடுத்து, சினிமாவையும் கற்றுக்கொடுத்து, சினிமாவில் ஒரு பெரிய ஹீரோவாக ஆக்குகிறார் சமுத்திரகனி.

துல்கர் சல்மானின் முதல் படமே சூப்பர் ஹிட் ஆக மாற வேற வேற இயக்குனர்களின் படங்களில் துல்கர் நடித்து பெரிய நட்சத்திரமாக மாறுகிறார். 

அந்த சமயத்தில் தான் சாந்தா என்ற படத்தை எடுப்பதற்காக மீண்டும் துல்கரை அழைக்கிறார் சமுத்திரகனி. 

படமும் ஆரம்பமாகிறது தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் இருப்பதால் படத்தின் இறுதி காட்சியை தான் நினைக்கும் படி தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் துல்கர். அதனை சமுத்திரக்கனி ஏற்க மறுக்க இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு சாந்தா திரைப்படம் பாதையில் நின்றுவிடுகிறது. 

சாந்தா படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அந்த படத்தின் நாயகியான பாக்யஸ்ரீக்கும் துல்கருக்கும் இடையே நெருக்கம் ஏற்படுகிறது. 

இதனை தெரிந்து கொண்ட சமுத்திரக்கனி பாக்கியஸ்ரீயை  இதெல்லாம் வேண்டாம் அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று கூறுகிறார். அதனை பாக்கியஸ்ரீ ஏற்க மறுக்கிறார். துல்கர் நல்லவர் தான் என்று கூறுகிறார்.

இந்த சூழ்நிலையில் அந்த மாடர்ன் ஸ்டுடியோவில் ஒரு கொலை நடக்கிறது. யார் அங்கு கொல்லப்பட்டார்? இந்த கொலையை செய்தவர் யார்? அந்த கொலை எதற்காக நடந்தது? சமுத்திரகனிக்கும் துல்கர் சல்மானுக்கும் இடையே இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததா? இல்லையா? என்பதே காந்தா படத்தின் மீதீக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : செல்வமணி செல்வராஜ்

தயாரிப்பாளர் : ராணா டக்குபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ்

தயாரிப்பு நிறுவனம் : ஸ்பிரிட் மீடியா, வேஃபேரர் பிலிம்ஸ்

DOP : டானி சான்செஸ் லோபஸ்

எடிட்டர் – லெவெல்லின் அந்தோனி கோன்சால்வேஸ்

கலை இயக்குனர் : ராமலிங்கம்

இசை : ஜானு சாந்தர்

நிர்வாக தயாரிப்பாளர் : சாய்கிருஷ்ண கட்வால், சுஜய் ஜேம்ஸ் 

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா/அப்துல் நாசர்