காளிதாஸ் 2 விமர்சனம்

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத், அஜய் கார்த்திக், அபர்னதி, பவானி ஸ்ரீ, சங்கீதா, ஆனந்த நாக், பிரகாஷ்ராஜ், கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் காளிதாஸ் 2.

சென்னையில் உள்ள புறநகர் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அபர்னதியும் அவரது கணவரான அனந்த் நாக்கும் நான்கு வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில்  புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டுக் கொண்டுள்ளது. அந்த சமயத்தில்  அபர்னதியின் குழந்தை காணாமல் போகிறது.

அந்த குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை அதிகாரிகளான பாரத் மற்றும் பவானி ஸ்ரீ இறங்குகிறார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பேச்சுலர்களை விசாரிக்கிறார்கள். அந்த சமயத்தில் அங்கு இருக்கும் அஜய் கார்த்தி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட அவரை விசாரித்து கொண்டிருக்கும் சமயத்தில் காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைக்கிறது.

இதனால் அஜய் கார்த்தி கைது செய்யப்படுகிறார் ஆனால் அதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் வழக்கறிஞராக இருக்கும் பிரகாஷ்ராஜ் அவரை விடுவித்து அழைத்துச் செல்கிறார்.

குழந்தை இறந்ததற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிப்பதில் பரத் ஒருபுறம் தீவிரமாக இருக்கிறார். மறுபுறம் அஜய் கார்த்தி தான் கொலையாளி என்று நிரூபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் பவானி ஸ்ரீ. 

இந்த சமயத்தில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில்  உயிரிழந்து விடுகிறார்.

இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் ஒரு பதற்றத்திலும் பயத்திலும் இருக்கிறார்கள். 

இந்த கொலைகளுக்கு காரணம் யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள்? அங்கு இருக்கும் மர்மங்கள் என்ன? என்பதை பரத் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே காளிதாஸ் 2 படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : ஸ்ரீ செந்தில் 

தயாரிப்பு : ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என் யோகேஸ்வரன் & பைவ் ஃபைவ் ஸ்டார் செந்தில்

இசை : சாம் சிஎஸ்

ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா 

மக்கள் தொடர்பு : யுவராஜ்