காலா விமர்சனம்

காலா விமர்சனம்

தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ரஜினி மும்பை தாராவியில். மும்பையில் முக்கிய பிரமுகராகவும், கட்சி தலைவராகவும் இருக்கும் நானா படேகர் தாராவி பகுதியில் இருக்கும் மக்களை வெளியே துரத்தி விட்டு, பிளாட் நகரமாக மாற்ற நினைக்கிறார். 
நானா படேகர் சம்பத் மூலமாக கன்ஸ்ட்ரக்ஷன் பணியில் ஈடுபடுகிறார். ரஜினியின் கடைசி மகன்,  தனியாக ஒரு அமைப்பு  ஏற்படுத்தி அதன் மூலம் நல்லது செய்து வருகிறார். சம்பத்திடம் நியாயம் கேட்டு போராட்டம் நடத்துகிறார்.  அங்கு பிரச்சனை நடக்க, சம்பத் ஆட்களை ரஜினி அடித்து விரட்டுகிறார்.
பிறகு எம்.எல்.ஏ தேர்தல் வருகிறது, இத் தேர்தலில் நானா படேகர் சார்பாக நின்ற சம்பத்தை, ரஜினியின் சார்பாக போட்டியிட்டவர் தோற்கடித்து வெற்றி பெறுகிறார்.
தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால் அவமானப்படும் சம்பத், ரஜினியை கொலை செய்ய முடிவு செய்கிறார். இந்நிலையில், ரஜினியின் முன்னாள் காதலியான ஹீமா குரேசி வெளிநாட்டில் இருந்து தாராவிக்கு வருகிறார். இவரும் குடிசைகளை அழித்து பிளாட் நகரமாக மாற்ற நினைக்கிறார். இதனையும் ரஜினி எதிர்க்கிறார். 
கடைசியில், சம்பத் ரஜினியை கொலை செய்தாரா? ரஜினி முன்னாள் காதலியின் ஹீமா குரேசி செயலுக்கு ஒத்துழைத்தாரா? நானா படேகரிடம் இருந்து தாராவி மக்களை காப்பாற்றினாரா? என்பது கலாவின் மீதி கதை.
 
ரஜினி குடும்ப சென்டிமெண்ட்டிலும்,  மக்களுக்கான போராட்டக் களத்திலும் ரசிகர்களை கவருகிறார்.  காலாவுக்கும் (ரஜினி) செரினாவுக்கும் (ஹீமா குரேஷிக்கும்) கெமிஸ்ட்ரி சூப்பர். இவர்கள் திரையில் தோன்றும் போது படம் பார்ப்பவர்களின் முன்னாள் காதல் நிச்சயம் மனதில் வந்து போகும்.
ரஜினியின் மனைவியாக நடித்துள்ள செல்வி (ஈஸ்வரி ராவ்) திருநெல்வேலி பாஷையில் சிறப்பாக நடித்துள்ளார். நம் உடம்புதான் நம் ஆயுதம் போராடுவோம் என்கிற வசனம் சூப்பர். ரஜினியின் நண்பராக வரும் சமுத்திரகனி சிறப்பான நடிப்பில் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். 
வில்லன்-அரசியல்வாதியாக வரும் நானா படேகரின் நடிப்பு அருமை. அதிரடி, ஆர்ப்பாட்டமில்லால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார்.  இதிகாசத்தில் ராவணனை கெட்டவனாகவும் ராமனை நல்லவனாகவும் காட்டியிருப்பார்கள். ஆனால் காலாவில் ராமனை கெட்டவனாகவும் ராவணனை நல்லவனாகவும் காட்டியிருக்கிறார் ரஞ்சித்.
நடிகர்கள் : 

ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, ஈஸ்வரிராவ், ஹுமா குரேஷி,சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா மற்றும் பலர்.

தொழில் நுட்பக்குழு:

இயக்குனர் – பா. ரஞ்சித்
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – முரளி . ஜி
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா
காஸ்ட்யூம்ஸ் – செல்வம்
ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா
ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா
தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது