மிகப்பிரம்மாண்டமாக காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் 30 நிமிடங்கள் பேசினார்.
அவர் பேசியவை, சிவாஜி பட வெற்றி விழாவில் பேசி கவுரவித்தார் திமுக. தலைவர் கருணாநிதி. அவரின் குரலை மீண்டும் கேட்க கோடான கோடி மக்களில் ஒருவனாய் நானும் ஆவலாய் உள்ளேன். ரோபோ படத்திற்கு பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவ உதவியாலும் ரசிகர்களின் பிரார்த்தனையாலும் மீண்டும் வந்தேன்.
மனசு சரியிருந்தால் உடம்பு நன்றாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்தால் மனசு நல்லாயிருக்கும். எனவே எனக்கு பிடித்ததை செய்ய சொன்னார்கள் மருத்துவர்கள். நடிப்பை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. எனவே சில நாட்கள் மட்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தேன். அதுதான் கோச்சடையான்.
அப்போது டெக்னாலஜி அவ்லோ இல்லை. எனவே முடிந்தவரை படத்தை ரிலீஸ் செய்ய சொன்னேன். அந்த படம் சரியாக போகவில்லை. அதன்பின்னர் லிங்கா படத்தில் நடித்தேன். அதுவும் சரியாக போகவில்லை. நதிகள் அணை பற்றிய படம் அது. தண்ணீர் பிரச்னை என்றால் என்னை அறியாமலும் ஆர்வம் வந்துவிடுகிறது. கங்கை நதியை பார்ப்பதற்காகவே நான் அடிக்கடி இமயமலை செல்கிறேன்.
அந்த இரண்டு படங்களும் சரியாக போகவில்லை. அப்போதுதான் ஒன்று தெரிந்துக் கொண்டேன். என்னைவிட வயது மிகவும் குறைந்த என் மகள் வயது பெண் (சோனாக்ஷி) நடித்தேன். அது இனி கூடாது என நினைத்தேன். கோச்சடையான் படத்தின் மூலம் அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது என தெரிந்துக் கொண்டேன்.
நல்லவனாக இருக்கலாம்; மிகவும் நல்லவனாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கோழை. லிங்கா சரியாக போகவில்லை என்பதால் நான் நடித்து முடித்து விட்டேன் என சொன்னார்கள். 40 ஆண்டுகளாக அப்படித்தான் என்னை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் நான் என் பாதையில் தொடர்ந்து செல்வேன். என் பட தயாரிப்பாளர் தனுஷ், அவர் என் மாப்பிள்ளை என்பதற்காக சொல்லவில்லை, நல்ல பையன், அப்பா – அம்மாவை ரொம்ப மதிக்கிறார். ரசிகர்களை மனதை வைத்து தான் ஒவ்வொரு படத்தின் கதையையும் கேட்கிறேன்.
காலா படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். காலா அரசியல் படம் அல்ல, ஆனால் அரசியல் இருக்கிறது. ரஞ்சித் நிச்சயம் பெரிய ஆளாக வருவார். தன்னை சுற்றி இருப்பவர்களும் நன்றாக வர வேண்டும் என எண்ணுபவர். நிச்சயம் ரஞ்சித்திற்கு ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது. ரஞ்சித் திட்டமிட்டு படத்தை முடிப்பவர், தயாரிப்பாளர்களின் இயக்குநர்.
நான் எப்போதும் சொல்வது போல் தாய், தந்தையரை முதலில் கவனியுங்கள். குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு இடம் கொடுங்கள். ஒவ்வொரு சிந்தனைக்கும் ஒரு கலர், எடை உள்ளது. எனவே மனதை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்.
எல்லாரும் நான் கடைசியாக அதை (அரசியல்) பேசுவேன் என எதிர்பார்க்கிறார்கள். கடமை இருக்கு, நேரம் பார்த்து வருவேன். நிச்சயம் தமிழ்நாட்டிற்கு நல்ல நேரம் பிறக்கும், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்! இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.