அமீன் பாரிஃப் இயக்கத்தில், சுபாஷ் செல்வம், முனிஷ்காந்த், ராஜேஷ் மாதவன், கௌதமி, வின்சு ராச்சே, சாவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார் விக்னேஷ்வர், அருண்குமார், பாவும்பா, சித்திரசேனன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இணைய தொடர் காக்கி சர்க்கஸ்.
முனீஷ்காந்த் சிறைச்சாலையில் வார்டனாக இருக்கிறார். அங்குள்ள கைதிகள் அனைவருக்கும் தான் எழுதிய புத்தகங்களை கொடுத்து கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்.
அவர் அப்படி கட்டளை இடுவதால் அங்கு இருக்கும் சிறைவாசிகள் வேறு வழியில்லாமல் அந்த புத்தகங்களை வாங்கி படிக்கின்றனர். அந்த சிறைச்சாலையில் ஒரு அம்மன் சிலை இருக்கிறது, அதன் கீழே ஒரு உண்டியலும் இருக்கிறது.
அந்த சிறைச்சாலைக்கு வரும் கைதிகள் அந்த உண்டியலில் காசு போட வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த உண்டியல் நிறைந்ததும் அந்த ஊரில் உள்ள பெரியவர்கள் அந்த உண்டியில் உள்ள பணத்தை எடுத்து சென்று விடுவார்கள் இப்படித்தான் பல வருடங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
நாயகனாக இருக்கும் சுபாஷ் செல்வம் அந்த சிறையில் போலீசாக வேலை செய்து வருகிறார் திருட்டு வேலை செய்பவர்களை பிடித்து ஜெயிலில் போடுகிறார் சுபாஷ் செல்வம். ஒரு நாள் சிறைக்குள் இருக்கும் உண்டியலில் உள்ள பணத்தை யாரோ திருடி சென்று விடுகிறார்கள்.
இந்த விஷயம் ஊருக்குள் தெரிந்து விட்டால் அந்த சிறைச்சாலைக்கு கெட்ட பெயர் கிடைப்பதுடன் ஊர் மக்கள் அனைவரும் முன்னிலையிலும் அசிங்கப்பட்டு விடுவோம் என்று நினைத்து முனிஷ்காந்தும் சுபாஷ் செல்வமும் உண்டியல் பணத்தை திருடிய திருடனை தேட ஆரம்பிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சுபாஷ் செல்வத்தின் பணமும் காணாமல் போகிறது.
அந்த திருடன் முனிஷ்காந்த் மற்றும் சுபாஷ் செல்வத்திடம் மாட்டினானா? இல்லையா? என்பதே காக்கி சர்க்கஸ் இனையத்தொடருடைய மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து மற்றும் இயக்கம் : அமீன் பாரிஃப்
ஒளிப்பதிவு : நீரஜ் ரேவி
எடிட்டர் : அர்ஜுன் பாபு
இணை எழுத்தாளர் : ஆகாஷ் சந்திரமோகன்
பாடல்கள் : அருண்ராஜ்
பின்னணி இசை & டிரைலர் இசை : விபின் பாஸ்கர்
தயாரிப்பாளர் : ஸ்ரீநிதி சாகர்
தயாரிப்பு : ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்
மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)


