எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பாக்யராஜ்

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய சர்கார் பட கதை திருட்டு விவகாரம் தமிழகம் அறிந்ததே. வருண் என்பவர் அந்த கதை என்னுனையது என சொல்ல,  எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் அவர்களும் உதவினார்.
 
இந்த விவகாரம் கோர்ட் வரை செல்ல காரணமானார் முருகதாஸ். விஜய் ரசிகர்கள் பாக்யராஜை விமர்ச்சிக்க தொடங்கினர். இறுதியாக வருண் உடன் முருகதாஸ் சமரசம் செய்துக் கொண்டார்.  தற்போது சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பிறகு இன்று  தன் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். சர்க்கார் பட கதை விவகாரத்தில் நான் கெஞ்சியும்  இயக்குனர் முருகதாஸ் உடன்படவில்லை. இதன் காரணமாகவே சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பாளரின் படத்தின் கதையை பற்றி வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.
 
தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படாமல் நேரடியாக நான் தேர்வானதுதான் நான் சந்தித்த அசௌகரியங்களுக்கு காரணமாக நினைக்கிறேன். எனக்கு நேர்ந்த அசௌகரியங்களை பற்றி சங்க நலன்கருதி வெளியிட விரும்பவில்லை.”  இவ்வாறு  இயக்குனர் கே பாக்யராஜ் அறிக்கை தெரிவித்து ராஜினாமா செய்துள்ளார்.