ஜூங்கா விமர்சனம்

 
பஸ் கண்டக்டராக வரும் (ஜூங்கா)விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியனை காதலிக்கிறார். மடோனாவை காதலிப்பதாக சொல்லும் ஒருவரை விஜய் சேதுபதி திட்டி அனுப்பி விடுகிறார். இதனால் கோபப்படும் அந்த நபர் விஜய் சேதுபதியை அடியாட்களுடன் வந்து அடித்துவிடுகிறார். தன்னை அடித்தவர்களை திருப்பி அடிக்க வேண்டும் என்று யோகி பாபுவிடம் ஐடியா கேட்கிறார். யோகி பாபு தலைவர் ஒருவரிடம் கூட்டி போவதாக சொல்லி விஜய் சேதுபதியின் பணத்தை செலவு செய்துவிடுகிறார்.
இதனால் எரிச்சல் அடையும் விஜய் சேதுபதி தன்னை அடித்தவர்களை தானே அடித்து துவம்சம் செய்துவிடுகிறார். அடிதடியில் விஜய் சேதுபதி இறங்கியது அம்மா சரண்யா பொன்வண்ணனுக்கு தெரிந்து விடுகிறது. தாத்தா, அப்பாவைப் போல நீயும் டானாக ஆகிவிடக் கூடாது என்று தான் சென்னையில் இருந்து இங்கு அழைத்து வந்தோம் என்கிறார். தாத்தாவும், அப்பாவும் தங்களுக்கு சொந்தமான தியேட்டரை செட்டியார் ஒருவருக்கு குறைவான விலைக்கு விற்று விட்டதாகவும், தனது குடும்பம் டான் குடும்பம் என்றும் கூறுகிறார். 
தங்கள் திரையரங்கை மீட்க சென்னை வருகிறார் விஜய் சேதுபதி. சின்ன சின்ன பஞ்சாயத்து, அடிதடி வேலைகளை செய்து டானாகிறார். இது  மற்ற டான்களுக்கும், பெரிய டான்  ராதாரவிக்கும் பிடிக்கவில்லை, விஜய் சேதுபதியை அழைத்து கண்டிக்கிறார்கள், அவரைகளை கலாய்த்து விட்டு செல்கிறார் நம்ம ஜூங்கா. 
தியேட்டரை வாங்க பணத்தை சேர்த்து கொண்டு தியேட்டர் உரிமையாளரான செட்டியாரை (சுரேஷ் மேனனை) சந்திக்கிறார். விஜய் சேதுபதியை, சுரேஷ் மேனன் அவமானபடுத்தி அனுப்புகிறார். தியேட்டரை மீட்கவும், சுரேஷ் மேனனை பழிவாங்கவும், அவரது மகள் சாயிஷாவை கடத்த பாரிஸ் பறக்கிறார் விஜய் சேதுபதி.
ஆனால் வேறு யாரோ சாயிஷாவை கடத்தி விடுகிறார்கள், கடத்தல் பழி விஜய் சேதுபதி மேல் விழுகிறது. சாயிஷாவை கடத்தியது யார்? விஜய் சேதுபதி சாயிஷாவை மீட்டு  பழியிலிருந்து தப்பித்தாரா? தியேட்டரை மீட்டாரா? சாயிஷா, மடோனா இருவரில் யாருடன் சேர்ந்தார்? என்பதே ஜூங்கவின் மீதிகதை.
கஞ்ச டானாக வரும் விஜய் சேதுபதி அசத்தியிருக்கிறார். யோகி பாபு, விஜய் சேதுபதி காம்பினேஷன் சூப்பர். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் மடோனா. பணக்கார வீட்டு பெண்ணாக வரும் சாயிஷா, நடனத்திலும், உடையிலும் ரசிகர்களை கவருவது நிச்சயம். சரண்யா பொன்வண்ணனும், விஜய் சேதுபதியின் பாட்டியும் நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார்கள். 
நடிகர்கள்
விஜய் சேதுபதி
சாயிஷா
மடோனா செபாஸ்டியன்
யோகி பாபு
சரண்யா பொன்வண்ணன்
சுரேஷ் மேனன்
விஜியா பாட்டி
ராதாரவி
மொட்டை ராஜேந்திரன்
மொத்தத்தில் ஜூங்கவை ரசிக்கலாம்.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்