ஜாலியோ ஜிம்கானா – விமர்சனம்

டிரான்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபுதேவா, மடோனா செபஸ்டின், யோகிபாபு, அபிராமி, ரோபோ சங்கர், புஜிதா, ஒய் ஜி மகேந்திரன், மதுசூதனன் ராவ், ஜான் விஜய், நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஜாலியோ ஜிம்கானா.

நாயகி மடோனா செபஸ்டின் பாதராக இருக்கும் யோகி பாபுவிடம் கதை சொல்வது போல் ஆரம்பமாகிறது படம்.

மடோனா செபாஸ்டியன் தன்னுடைய தாத்தா ஓய் ஜி மகேந்திரன், அம்மா அபிராமி மற்றும் தன் 2 தங்கைகளுடன் சேர்ந்து வெள்ளைக்காரன் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அப்போது அரசியல்வாதி ஒருவரிடம் இருந்து பெரிய ஆர்டர் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் பிரச்சனை செய்கின்றனர்.

அதற்காக வக்கிலான பிரபுதேவாவை பார்க்க நட்சத்திர விடுதிக்கு செல்கின்றனர். அவர்கள் போகும் நேரத்தில் எதிர்பாராமல் பிரபு தேவா இறந்து கிடக்கிறார்.

இதனால் பதற்றமடைந்து, தாங்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது என சடலத்தை அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர்.
அதன் பிறகு பல பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள்.

பிரபுதேவாவை கொன்றது யார்? மடோனா செபாஸ்டியன் குடும்பத்தினரின் பிரச்சினைகள் தீர்ந்ததா? இல்லையா? என்பதை ஜாலியாக சொல்லும் படமே ஜாலியோ ஜிம்கானா.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கலை இயக்கம் : ஜனார்த்தனன்
படத் தொகுப்பு – ‘அசுரன்’, ‘விடுதலை’ புகழ் ராமர்
ஒளிப்பதிவு : கணேஷ் சந்திரா
நடன இயக்கம் : பூபதி ராஜா
சண்டை : மகேஷ் மாத்திவ், பிரதீப், பாடல்கள் : மு.ஜெகன் கவிராஜ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.