ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகள் ஆறு மாதங்களாக இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு 11.59 மணியுடன் அவை நிறைவு பெற்று விடும் என ஜியோ அறிவித்துள்ளது.
ஜியோ கட்டண சேவைகள் நாளை முதல் துவங்கவுள்ளது. இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்கள் சேவையை தொடர்ந்து பயன்படுத்த ஜியோ பிரைம் திட்டத்தில் இன்று இரவு 11.59க்குள் ரீசார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யவில்லை எனில் உங்களது ஜியோ சேவைகள் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வேலை செய்யும். அதாவது சிம் கார்டு ஆக்டிவாக வைக்கப்பட்டிருக்கும், எனினும் டேட்டா, உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த பிரைம் அல்லாத ரீசார்ஜ்களை செய்ய வேண்டும்.
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு அதிகளவு சலுகைகளை வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளதை தொடர்ந்து 5 கோடி பேர் ஜியோ சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த கட்டணம் செலுத்தியுள்ளனர். பிரைம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய தவறியவர்களுக்கு சேவைகளின் விலையில் பிரைம் வாடிக்கையாளர்களை விட அதிகமாக இருக்கும்.
பிரைம் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு ரூ.303 ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டுகிறது. இத்துடன் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையும் வழங்கப்படுகின்றது, இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மொத்தமாக 28 நாட்களுக்கு 33 ஜிபி 4ஜி டேட்டா பெற முடியும்.
பிரைம் திட்டத்தில் சேராதவர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகளோடு 28 நாட்களுக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டா மட்டுமே வழங்கப்படும். இதே போன்று ஜியோவின் அனைத்து திட்டங்களிலும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ பிரைம் மற்றும் சாதாரண ஜியோ திட்டங்களின் விலை ரூ.19 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ.9,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் வேலிடிட்டி குறைந்த பட்சம் ஒரு நாள் மற்றும் அதிகபட்சம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது ஆகும்.