கோவில்பட்டியில் நகைத் தொழிலாளர் திறன் சான்றிதழ் வழங்கும் விழா

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தங்கமஹால் திருமண மண்டபத்தில் விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கம் சார்பில் நகைத் தொழிலாளர் திறன் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மத்திய ,மாநில அரசின் தொழிற்கடன் திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். விஸ்வகர்ம மகாஜன சங்க முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம், விஸ்வகர்ம துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி மேலாhள் பாலமுருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்க செயலாளர் கணேசன் வரவேற்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் இரா.ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் சங்கரசுப்பிரமணியன், கோல்டுஸ்மித் அகாடமி நிர்வாக இயக்குநர் திருப்பதி ராஜன் ஆகியோர் மத்திய,மாநில அரசு தொழிற்கடன் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் சிவந்தி.நாரயணன், நகர தலைவர் வேல்முருகன் மற்றும் நகை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கம் பொருளாளர் ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.